ஓய்வுக்குத் தயாராகும் ஒபாமா
குத்தகை வீட்டுக்கு வந்து இறங்கும் நெகிழ்ச்சியான தருணம்..!
The Obamas start to leave
the White House to make way for Trump: Moving vans arrive at $4.3m DC mansion
where the family will live -but they'll jet out of the inauguration for sunny
Palm Springs first
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்கவுள்ளார்
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள தமது பிரத்தியேகப் பொருட்களை வாஷிங்டனில் தாம் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கு ஒபாமா மாற்றி வருகிறார்.
வாஷிங்டனில் சுமார் 43 இலட்சம் டொலர் குத்தகையில் ஒபாமா வாங்கியுள்ள வீட்டிற்கு, பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்கள் வந்து போகத் தொடங்கியுள்ளன.
பதவி விலகியதும் தனது சொந்த ஊரான சிக்காகோவுக்குச் செல்ல ஒபாமா விரும்பியபோதும், தனது இளைய மகள் ஷாஷாவின் படிப்பு நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே அடுத்த இரண்டு வருடங்கள் வாஷிங்டனில் தங்க முடிவு செய்துள்ளார்.
சுமார் 8,200 சதுர அடி பரப்பளவுள்ள இந்த வீடு 9 படுக்கை அறைகள், அமைதியான தோட்டம், கேளிக்கை விழாக்களுக்கான பிரத்தியேக மண்டபம் என்பனவற்றைக் கொண்டிருக்கிறது.
கடந்த 1928 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீடு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் ஊடகச் செயலாளராக இருந்த ஜோ லொக்ஹார்ட்டுக்குச் சொந்தமானது.
அவரிடம் இருந்தே ஒபாமா இந்த வீட்டை குத்தகைக்குப் பெற்றிருக்கிறார். பதவி விலகியதும் தனது குடும்பத்தினருடன் கலிஃபோர்னியாவுக்கு சுற்றுலா செல்ல ஒபாமா திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment