தரம் III கல்வி நிர்வாகசேவைக்கு
198 பேர் புதிதாக நியமனம்

தற்போதைய பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கல்வியமைச்சராக பதவிவகித்த காலபகுதிக்கு பின்னர் ஒருவருட சேவைப்பயிற்சியுடன் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் iiiக்கு புதிதாக 198 பேரை இணைத்துக்கொள்ள முடிந்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இவர்களுக்கான நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அரசியல் மற்றும் தனிப்பட்ட சலுகைககள் இன்றி பகிரங்க மற்றும் ஒழுக்கவிதி நடைமுறைகளுக்கு அமைவாக கல்வித்துறையில் தகுதிபெற்ற ஆற்றல்மிக்கவர்களை இணைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு தாம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
 இதற்கமைவாக இலங்கை நிர்வாக சேவையில் இருந்துவரும் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை முறையாக பூர்த்திசெய்யும் வகையில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் iii ற்று அதிகாரிகளை சேர்த்துக்கொள்வதற்காக போட்டிப்பரீட்சை 2016ம் ஆண்டு நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு இன்று முதல் அடுத்தமாதம் 12ம் திகதிவரையில் மஹரகம தொழில்முகாமைத்துவ கல்விபீடத்தில் பயிற்சி இடம்பெறவுள்ளது.
இதன்பின்னர் நாடுமுழுவதிலுமுள்ள மாகாணக்கல்வி அலுவலகங்கள் வலயகல்வி அலுவலகங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைவாக உதவிக்கல்விப்பணிப்பாளர், விடையதான பணிப்பாளர் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களாக இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

இந்த வைபவத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி இராதாகிருஷணன். , கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஏவாவித்தான உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top