சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டடவர்களுக்கு

காணி உறுதிகள்

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்ட சின்ன பாலமுனை மக்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (07) பாலமுனை அல்ஹிக்மா பாடசாலையில் நடைபெற்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சுனாமி வீடுகளுக்கான காணி உறுதிகளை பயனாளிகளிடம் கையளித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.. அன்ஸில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல். நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், .எல்.எம். மாஹிர், தவம் உட்பட அட்டாலைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் அதிசேய ராஜ், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top