வறட்சி காலநிலையின் போது நீர் வழங்கல் வசதிகளை
முகாமைத்துவம் செய்வதற்கு
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினால்
கிராமிய பிரதேசங்களில்
சிறிய நீர்
வழங்கல் பிரிவு
மிக மோசமான
முறையில் பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளது.
இந்த
நிலைக்கு முகங்கொடுக்கும்
வகையில் தேசிய
நீர் வழங்கல்
மற்றும் வடிகாலமைப்புச்
சபையின் மூலம்
நீர் பவுசர்
மூலம் மேற்கொள்ளப்படுகின்ற
நீர் வழங்கல்
நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கும், 400 குழாய்
கிணறுகளை அமைப்பதற்கும்,
வறட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில்
காணப்படும் பொது ஆழமான 1000 கிணறுகளை புனரமைப்பதற்கும்,
கையினால் இயக்க
கூடிய 200 கிணறுகளை
பின்தங்கிய கிராமங்களில் நிர்மாணிப்பதற்கும்
திட்டமிடப்பட்டிருக்கிறது,
இதுமாத்திரமல்லாமல், நீரினை கிரமமாக பயன்படுத்துவது தொடர்பில்
பொதுமக்களை அறிவுறுத்துவதற்கும், நீர் வழங்கல் அவசரமாக
குறையும் சந்தர்ப்பங்களில்
தேவையான துரித
நடவடிக்கைகளை எடுப்பதற்காக உரிய அதிகாரிகள் மற்றும்
நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஓருங்கிணைப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது.
இது தொடர்பாக நகர திட்டமிடல்
மற்றும் நீர்
வழங்கல் அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment