சாரதிகளிடமிருந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு
சம்மதத்தை பெற்றுக் கொள்வதற்கான யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பப் படிவம் மற்றும் புதுப்பித்தல் படிவம் என்பவற்றில் உடல் உறுப்பு மற்றும் இழையங்களின் தானத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் கூற்று ஒன்றினை உள்ளடக்கும் விதமாக மறுசீரமைப்பதற்கும்
வீதி விபத்துமூலம் மூளைச்சாவு மற்றும் குருதிச்சுற்றோட்ட ரீதியாக இறக்க நேரிடும் சாரதிகளிடமிருந்து அவர்களின் உடல் உறுப்பு மற்றும் இழையங்களை தானம் செய்வதற்குரிய சம்மதத்தினை தற்போதுள்ள சாரதி அனுமதி பத்திரத்தில் காட்சிப்படுத்தக் கூடியவாறு திருத்தி மறுசீரமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் சுகாதார போஷhக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment