கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவாக மாறிவரும் சசிகலா!
அவரின் தைரியம், கம்பீரம், ஆளுமையில் அவரை பின்பற்றுவாரா ?
அரசியல்
தலைவர்கள் தங்களுக்கென
தனிஅடையாளம் இருக்க வேண்டும் என்று விருப்பம்
கொண்டவர்கள். அரசியல்
தலைவர்கள் எதேனும்
ஒரு விஷயத்தில்
ஒருவரிடம் இருந்து
இன்னொருவர் மாறுபட்டு இருப்பார்கள். அதிலும் பெண்
அரசியல் தலைவர்கள்
என்றால், கண்டிப்பாக
குறிப்பிடும்படியான தனித்துவம் இருந்தே
தீரும். அதுபோல
அ.தி.மு.க பொதுச் செயலாளராக
நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா தனக்கென
ஒரு அடையாளத்தை
கொண்டு வர
முயற்சிக்கிறார். ஆனால், அந்த மாற்றங்கள் அனைத்தும்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப்
பின்பற்றுவதுபோலத் தோன்றுகிறது.
பொதுச்
செயலாளர் பதவிக்கு
அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களால்
நியமிக்கப்பட்டவர் சசிகலா. பொதுச்செயலாளர்
ஆவதற்கு முதல்நாள்
வரை சாதாரணமான
உடையில் காணப்பட்டார்.
பொதுச்செயலாளர் ஆனபிறகு கழுத்து மூடப்பட்ட , கை
முட்டி நீள
ரவிக்கையும் அணிய ஆரம்பித்தார். ஏப்போதும் டல்லான
கலர் புடவைகளை
மட்டுமே அணிந்து
வந்தவர், அன்றிலிருந்து
பளீர் நிறங்களைக்
கொண்ட உடைகளை
அதிகம் உடுத்துகின்றார். புடவைக்குப்
பொருத்தமான நிறங்களில்
ரவிக்கையும் அணிகிறார். ஜெயலலிதாவும் பெரும்பாலும் இதே
தோற்றத்தில்தான் இருப்பார். உடைகளில் இருக்கும் வித்தியாசம்
ஒன்றுதான். அவர் புடவை முந்தானையை தோள்களை
மூடியபடி இருப்பார்.
சசிகலா இன்னும்
அவ்வாறு மாறவில்லை.
ஜெயலலிதா,
சின்னதாக வைரத்தோடு
மட்டுமே அணிந்திருந்தார்.
அதேபோல, இப்போது
சசிகலாவும் அதே மாதிரி தோடு அணியத்
தொடங்கியுள்ளார்.
பெரும்பாலும்
இரு கைகளிலும்
வளையல் அணியும்
பழக்கம் உள்ளவர்
சசிகலா. சில
சமயங்களில் புடவை நிறத்துக்குத் தகுந்தாற் போல
வாட்ச் அணியும்
பழக்கமும் கொண்டவர்.
வாட்ச்-சின்
பட்டை மிகவும்
சின்னதாக இருக்கும்.
பொதுச்செயலாளர் ஆனதும்,
ஜெயலலிதாவை போலவே கருப்பு பட்டை உடைய
வாட்சை கட்டுகின்றார்.
அது போல வாட்சின்
டையலும் பெரியதாக
இருக்கிறது.
பொதுச்செயலாளர்
பதவி ஏற்க
அ.தி.மு.க அலுவலகத்துக்கு டிசம்பர்
31-ம் திக்iதி
வந்தார் சசிகலா.
அன்று எப்போதும்
இல்லாத அளவுக்கு
வைர மோதிரம்
அணிந்திருந்தார். மிக எளிமையாக இருந்தவர், திடீரென்று
அன்று ஆடம்பரத்தை
வெளிகாட்டத் தொடங்கினார்.
எப்போதும்
சசிகலா தலைமுடியை
பின்னலாகப் போட்டிருப்பார். பொதுச்செயலாளர்
பதவியேற்றபிறகு தன்னுடைய தலைமுடியை வலை போட்டு
மூடியிருந்தார். இதுவும் ஜெயலலிதாவின் ஸ்டைல் தான்.
ஜெயலலிதா
ஐயங்கார் வழக்கப்படி
நெற்றியில் நாமம் போட்டிருப்பார். அதையும் தவறவிடாமல்
சசிகலா பின்பற்றிக்
கொண்டிருக்கிறார். வட்டமாக ஒரு
பொட்டு வைத்து
அதன் மேல்
நாமம் போட்டுத்தான்
இப்போதெல்லாம் சசிகலா அலுவலத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா
பயன்படுத்திய TN09BE 6167 என்ற எண்
கொண்ட லேண்ட்
க்ரூஸர் காரில்தான்
சசிகலா பயணிக்கிறார்.
அவரது பாதுகாப்புக்கு நான்கு
கார்கள் உடன்
வருகின்றன. காரின் முன்பக்கம் ஜெயலலிதா உட்காரும்
இடத்தில் இப்போது
சசிகலா உட்காருகின்றார்.
சசிகலா
அ.தி.மு.க அலுவலகம் வருவதற்கு
முன்னரே ஜெயலலிதா
பயன்படுத்திய நாற்காலிகள் வந்து இறங்கின. அதில்
இரண்டு நாற்காலிகள்
அலுவலகத்தின் கீழ் தளத்திலும், மற்ற இரண்டு
நாற்காலிகள் மேல் தளத்திலும் போடப்பட்டிருக்கின்றன. அந்த நாற்காலிகளில் ஒன்றில்தான் சசிகலா
உட்கார்ந்தார். அதில் உட்கார்ந்து தான் கையெழுத்திட்டார்.
உச்சி
முதல் உள்ளங்கால்
வரை ஜெயலலிதாவை
பின்பற்றுகின்றார் சசிகலா.வெளிதோற்றத்தில்
ஜெயலலிதாவை பின்பற்றலாம். ஆனால், அவரின் தைரியம்,
கம்பீரம், ஆளுமையில்
அவரை பின்பற்றுவாரா
என்பது கேள்விக்
குறியாகவே இருக்கிறது.
0 comments:
Post a Comment