சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் வரலாறு..!
முஸ்லிம்கள்
ஓரிடத்தில் குடியேறி அவ்விடத்தில் வாழத் தொடங்கியதும்
அவர்கள் குடியிருப்பதற்குரிய
வீடுகள் அமைக்கும்
போது தொழுகைக்கான
பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்துக் கொள்வது இஸ்லாமியர்களின்
வரலாறு ஆகும்.
சாய்ந்தமருதில்
முஸ்லிம்கள் வாழத் தொடங்கிய காலத்தில் இந்த
ஊரின் தென்
பகுதி காடாக
இருந்துள்ளது. அக்காட்டுப் பகுதியில் மரங்களை வெட்டியெடுத்து
தற்பொழுது பெரிய
பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் மரங்கள், இலுக்குகள்,
கிடுகுகள் என்பனவற்றைக்
கொண்டு தொழுகைக்கான
சிறிய பள்ளிவாசல்
ஒன்றை தற்காலிகமாக
அன்று அமைத்துக்
கொண்டார்கள். இப்பள்ளிவாசல் முன்னர் முகைதீன் பள்ளிவாசல்
என அழைக்கப்பட்டது.
12 ஆம்
நூற்றாண்டில் இஸ்லாமிய தஃவாப் பணிக்காக பக்தாத்
நகரிலிருந்து முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி
அவர்களின் சிஷ்யர்
இலங்கை வந்ததாகவும்
அவர் அக்கால
சிங்கள அரசனின்
(கஜபாகு) புதல்வனது
தீராத நோயைக்
குணப்படுத்தியதினால் அவருக்கு அந்த
அரசன் கரைவாகுப்
பிரதேசத்தைப் பரிசாகக் கொடுத்து அங்கு காணப்பட்ட
பள்ளிவாசல்களை முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்படல்
வேண்டும் என்றும்
கட்டளையிட்டதாகவும் இங்குள்ள முன்னோர்கள்
கூறி வைத்துள்ளனர்.
கடல்
வழியாக வந்த
ஒல்லாந்தக் குழுவினர் இலங்கையில் முதன் முதலாக
காலடி வைத்த
இடம் சாய்ந்தமருது
எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1602 ஆம் ஆண்டு ஜுன் மாதம்
2 ஆம் திகதி
ஒல்லாந்தரது கப்பல் ஒன்றின் தளபதியான ஜொரிஸ்
வான் ஸ்பில்
பேர்கன் சாய்ந்தமருதில்
தரையிறங்கி பின்னர் சம்மாந்துறையில் தங்கியிருந்து, அங்கிருந்து
கண்டிக்குச் சென்று முதலாம் விமல தர்ம
சூரியன் மன்னனைச்
சந்தித்தான்.
இப்பயணத்தின்
போது மட்டக்களப்பு
பிரதேசத்தில் தான் சந்தித்த சோனகர் (Mooren) மற்றும்
துலுக்கர் (Tureken) பற்றியும்
தனது நாட்
குறிப்பேட்டில் விபரித்துள்ளான். (Journal of Spilbergen 1602 – Translation by
K.D.Paranavitane -1997 page 23)
சாய்ந்தமருது
பெரிய பள்ளிவாசல்
1691 ஆம் ஆண்டளவில்
அன்று மட்டக்களப்புக்
கச்சேரியில் அடை அறவீட்டுக் கணக்கராக்க் கடமை
புரிந்த சதக்குலெவ்வை
என்பவரினால் பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது.
1870 ஆம் ஆண்டில் பிரதம மரைக்காயர்
மீராலெவ்வைப் போடி வன்னியனார் காலத்தில் சுமார்
1000 பேர் தொழக்
கூடிய இட
வசதியுள்ள பள்ளிவாசலாக
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மாற்றம் பெற்றது.
1961 ஆம் ஆண்டில்
பிரதம மரைக்காயர்
மு.அ
அப்துல் கபூர்
அவர்களின் காலத்தில்
இப் பள்ளிவாசலுக்கு
முன் பக்க
மண்டபம் ஒன்று
அமைக்கப்பட்டதுடன் முகப்பு வேலைகளும்
செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.
தற்போதய
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சுமார் 5000 பேர்
தொழக்கூடிய இட வசதி கொண்ட நவீன
இரு மாடிக்
கட்டடமாக கட்டுவதற்கு
1985 ஆம் ஆண்டு
பிரதம மரைக்காயர்
எம்.ஐ.எம்.மீராலெவ்வை
தலைமையிலான நம்பிக்கையாளர் மற்றும் மரைக்காயர் சபையினரால்
ஆரம்பித்து வைக்கப்பட்டு 2003 ஆம் ஆண்டு பிரதம
மரைக்காயர் ஐ.எம்.முகைதீன் காலத்தில்
பூர்த்தி செய்யப்பட்டதாகும்.
இப் பள்ளிவாசலில்
இமாம்களாகக் பணிபுரிந்தவர்கள் விபரம்,
ஆலிம்களின் பெயர்
பெரிய
ஆலிம் சேகு
அகமது
சே.அ.மு.யாசின்லெவ்வை ஆலிம்
(பெரிய ஆலிம்
மகன்)
சின்ன
ஆலிம்
செய்யது
முகம்மது ஆலிம்
(சின்ன ஆலிம்
மகன்)
காதர்
லெவ்வை (லெவ்வைத்
தம்பிப் போடியார்
மருமகன்)
அலியார்
லெவ்வை (பெரிய
லெவ்வை)
சின்னலெவ்வை
(காஸிம் மாஸ்டரின்
மூத்த வாப்பாட
தந்தை)
முஹல்லம்
ஆதம்லெவ்வை (டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தகப்பனின்
தகப்பன்)
மெளலவி
பாஸில் ஏ.எல். அப்துல்
காதிர் பரிகாரி
எம்.எம்.கலந்தர்லெவ்வை
ஆலிம் ஜே.பி. (சீனி
ஆலிம்)
எஸ்.எம்.ஆதம்லெவ்வை
ஆலிம் (புலவர்
ஆலிம்)
மீராசாஹிப்லெவ்வை
(கதீப் எம்.ஐ.அப்துல்
றஹீம் தந்தை)
சேகு
உதுமாலெவ்வை (பொறியியலாளர் றசீத் தகப்பன்)
முகம்மது
காசிம் (புதிய
லெவ்வை/ செய்யதுப்
பிள்ளை சகோதரர்)
இ.லெ. உமர்லெவ்வை
எம்.எஸ்.அபூபக்கர்லெவ்வை
மெளலவி
கே.எல்.எம்.பாறூக்
மெளலவி
ஏ.அப்துர்
ரஸ்ஸாக்
மெளலவி
ஏ.எஸ்.எம். சாலிஹ்
(ஜே.பி)
மெளலவி
ஏ.எல்.அப்துல் மஜீது
(ஜே.பி)
மெளலவி
எஸ்.எச்.ஆதம்பாவா
மெளலவி
யூ.எல்.எம். காசிம்
மெளலவி
ஏ.எம்.அபுல்ஹசன்
மெளலவி
எம்.ஐ.
ஆதம்பாவா (ஜே.பி)
மெளலவி
யூ.எல்.எம்.சம்சுதீன்
மெளலவி
ஏ.அஷ்ரப்
முஅத்தின்கள்
மீராசாய்வு (முத்து முஹம்மதுவின் வாப்பா)
ஐ.எல்.முஹம்மது காஸீம்
தம்பிக்கண்டு
எம்.இஸ்மாயில்
ஏ.எல்.எம்.அபூபக்கர் (சாஹுல் ஹமீது)
உ.சுபைர்
எம்.எம்.இல்யாஸ்
காரியாலய கணக்குப்பிள்ளைகள்
கே.எல்.முஹம்மது காசிம் (இவர் 1941 ஆம் ஆண்டு
தொடக்கம் 1997 வரை அரும்பணியாற்றியவர். அரசாங்கத்தின் இலிகிதர் வேலையை பள்ளிக்
கடமைக்காகத் தியாகம் செய்து இக்கடமைச் செய்துள்ளார்.)
எம்.சீ.எம்.மீராஸாஹிப் (ஓய்வு பெற்ற கிராம
சேவையாளர்)
ஏ.எம்.காசிம்(ஓய்வு பெற்ற தபாலதிபர்)
ஐ.ஏ.அஹட்(ஓய்வு பெற்ற
அதிபர்)
எம்.எம்.ஆதம்பாவா(ஓய்வு
பெற்ற அதிபர், போதனாசிரியர்)
0 comments:
Post a Comment