அமெரிக்காவில் ‘ஒபாமா கேர் இன்சூரன்ஸ் முடக்கம்:

ஜனாதிபதியாக முதல் கையொப்பமிட்ட டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கொண்டு வந்தஒபாமா கேர்இன்சூரன்சு திட்டத்தை முடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உத்தரவில் டொனால்டு டிரம்ப் முதல் கையெழுத்து இட்டுள்ளார்.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கேபிடல் ஹில்லில் நேற்று பதவி ஏற்றார். உடனே வெள்ளை மாளிகை சென்ற அவர் ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார்.
அப்போது பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கொண்டு வந்தஒபாமா கேர்இன்சூரன்சு திட்டத்தை முடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உத்தரவில் முதல் கையெழுத்து போட்டுள்ளார்.

அந்த உத்தரவில்ஒபாமா கேர்திட்டத்தின் சட்ட விதிமுறைகள் முடக்கப்பட்டு அவை அரசு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. இதை விட மிக சிறப்பான இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை ஜனாதிபதி டிரம்பின் செய்தி தொடர்பாளர் சீன்ஸ்பைசர் அளிக்கவில்லை.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top