இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு விரைவாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
டாவோஸ் நகரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவினை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தெற்காசியாவில் சமாதானம் மற்றும் உறுதிப்பாட்டை உறுதிசெய்தல், பாதுகாப்பு தேவைகளை சுட்டிக்காட்டிய இருநாட்டு பிரதமர்கள் வறுமை மற்றும் தீவிரவாதம் போன்றவற்றை இல்லாது ஒழித்தல் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
இலங்கை இந்துசமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இருப்பது தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்டுவரும்அதன் வேலைத்திட்டம் தொடர்பிலும் பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு விளக்கிக்கூறினார்.
0 comments:
Post a Comment