பாரிய கொழும்பு கழிவு நீர் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகியவற்றை
முன்னேற்றும் முதலீட்டு வேலைத்திட்டத்திற்கு
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உரிமை அபிவிருத்தி முகவராண்மை ஆகியவற்றினால் நிதியுதவி அளிக்கப்படும் பாரிய கொழும்பு கழிவு நீர் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகியவற்றை முன்னேற்றும் முதலீட்டு வேலைத்திட்டம் - கருத்திட்ட இலக்கம் - 02 இன் கீழ் 15,000 கண மீற்றர் கொள்ளவைக் கொண்ட கொத்தடுவை நிலத்தடி நீர் சேமிப்பகம், கொத்தடுவை நீர் கோபுரம் மற்றும் பூஸ்டர் குழாய்ப்பொறி நிலையம் என்பவற்றை நிர்மாணித்தல் மற்றும் நீர் வழங்குவதற்காக 1200 மி.மீ. அகவல் கொண்ட குழாய்களை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்களின் பெயரில் ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment