ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்
ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு
விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும்
ஊழியர்
பொறுப்பு நிதியச்
சபை 5ம்
ஆண்டு புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்திபெற்ற தமது உறுப்பினரின் பிள்ளைகளுக்கு
இம்முறையும் புலமைப்பரிசிலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும்
3 மாதங்களுக்குள் இந்தப் புலமைப்பரிசிலை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக
சபையின் பிரதிப்
பொது முகாமையாளர்
டபிள்யு.எஸ்.வசந்த திசாநாயக்க
தெரிவித்துள்ளார்.
கடந்த
ஓகஸ்ட் மாதத்தில்
நடைபெற்ற 5ம்
ஆண்டு புலமைப்பரிசில்
பரீட்சையின் பெறுபேறுகளுக்குஅமைய விண்ணப்பங்கள்
கோரப்பட்டுள்ளன. இதுவரை 5 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக
பிரதிப்பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு
நிதியத்திற்கு உறுப்பினர்கள் தொடர்ந்து பத்து வருடங்கள்
பங்களிப்பு செய்திருந்தால் இந்தப் புலமைப்பரிசிலை பெற்றுக்கொள்வதற்கு
தகுதியுடையவர்களாவர். ஒரு பிள்ளைக்கு
15 ஆயிரம் ரூபா
என்றவகையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக
தெரிவித்தார்.
அண்மையில்
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப்
பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கும்
ஊழியர் பொறுப்பு
நிதியச் சபை
12 ஆயிரம் ரூபா
புலமைப்பரிசிலாக வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.. இதற்கான
விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment