பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க - கொலம்பியா பல்கலைக்கழக
பேராசிரியர் ஜோசப் ஸ்ரிக்லிட்ஸ் சந்திப்பு
சுவிட்சர்லாந்துக்கு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக சர்வதேச
மற்றும் மக்கள்
தொடர்பு பிரிவின்
பேராசிரியர் ஜோசப் ஸ்ரிக்லிட்ஸ் இடையில் சந்திப்பு
இடம்பெற்றுள்ளது.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின்
போது இலங்கையின்
எதிர்கால பொருளாதாரம்
மற்றும் அபிவிருத்தி
தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு
வருகை தருமாறு
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது
விவகார நிருவாகத்தின்
பேராசிரியர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் அழைப்பும் விடுத்துள்ளார்.
இந்த
விஜயத்தின் நோக்கமானது நம் நாட்டின் எதிர்கால
வளர்ச்சி திட்டங்கள்
தொடர்பாக வெளிநாட்டு
ஆலோசனை பெற
வேண்டும் என்பதாகும்.
டாவோஸ்,
சுவிச்சர்லாந்தில் உலக பொருளாதார
மன்ற கூட்டத்தில்
பேராசிரியர் ஸ்டிக்லிட்ஸ் உடன் விவாதங்கள் நடத்திய
அதே நேரத்தில்,
இலங்கையின் எதிர்கால பொருளாதார மற்றும் வளர்ச்சி
வாய்ப்புக்களை பற்றியும் அலசப்பட்டது.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் அமைந்துள்ள
தேசிய அரசின்
செயல்திட்டங்களை அவருக்கு தெளிவுபடுத்தியதுடன்
2030 ம் ஆண்டளவில்
ஒரு உயர்
வருவாய் நாடுகளின்
பட்டியலில் இலங்கையும் இணைத்துக்கொளவதற்கு
மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களையும் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
விளக்கிக்கூறினார்.
0 comments:
Post a Comment