முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு தீவிர சிகிச்சை

Former President George HW Bush in intensive care


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் 41-ஆவது ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் (92). அவர் 1988-ஆம் ஆண்டு முதல் 1992 வரை 4 ஆண்டுகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். அதற்கு முன்பாக எட்டு ஆண்டு காலம் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் கீழ் துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.
இவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு ஹூஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை சேர்க்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு செயற்கையாக சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசம் ஓரிரு நாட்கள் தொடரும் என்றும் அவர் தானே சுவாசிக்கும் அளவுக்கு உடல் நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே மருத்துவமனையில் அவரது மனைவி பார்பரா புஷ்ஷும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பார்பரா புஷ் கடந்த பல வாரங்களாக இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். தற்போது அவரது உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top