முன்னாள் பிரதியமைச்சர்
மயோன் முஸ்தபாவுக்கு
எதிரான இலஞ்ச
வழக்கு
ஜுன் மாதம்
15 ம் திகதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள்
பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு எதிரான இலஞ்ச
வழக்கின் பிரதான
சாட்சிகளில் ஒருவரான விமல் வீரவங்ச நீதிமன்றத்தில்
ஆஜராகாத காரணத்தினால்
வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜ்பக்ஸ அரசாங்கத்தின் முதல் தவணைப்
பதவிக் காலத்தில்
உயர் கல்வித்துறை
பிரதியமைச்சராக பதவி வகித்த மயோன் முஸ்தபா
2010ம் ஆண்டு
ஜனாதிபதித் தேர்தலின்போது அரசாங்கத்தை விட்டும் விலகி
ஐக்கிய தேசியக்
கட்சியுடன் மீண்டும் இணைந்து கொண்டிருந்தார்.
அத்துடன்
குறித்த ஜனாதிபதித்
தேர்தலில் சரத்
பொன்சேகாவுக்கு ஆதரவளித்திருந்த அவர், தன்னுடன் இணைந்து
சரத் பொன்சேகாவுக்கு
ஆதரவளிக்க முன்வருமாறு
தேசிய சுதந்திர
முன்னணியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் முஸம்மிலுக்கும்
அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்காக
முதற்கட்டத் தவணையாக 42 லட்சம் ரூபா பணத்தை
மயோன் முஸ்தபா
தனது கைப்பட
முஸம்மிலிடம் லஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு
அவருக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த
வழக்கு நேற்று
கொழும்பு பிரதான
நீதவான் நீதிமன்றத்தில்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற
உறுப்பினர் விமல் வீரவங்ச, நீதிமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை.
உண்ணாவிரதம்
காரணமாக அவர்
நீதிமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலையில் உடல்
நலம் குன்றிக்
காணப்படுவதாக சிறைச்சாலை மருத்துவமனை தலைமை மருத்துவர்
எழுத்து மூலம்
நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து
வழக்கு எதிர்வரும்
ஜுன் மாதம் 15 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.