இலங்கை அதிபர் சேவை புதிய சேவைப்
இலங்கை அதிபர் சேவை 2-I ல் கடமையாற்றியவர்களுக்கு
இலங்கை அதிபர் சேவை I ற்கு பதவி உயர்வு
(அஸ்லம்)
இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவை பிரமாணக் குறிப்பினால் பாதிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் வகுப்பின் முதலாம் தர அதிபர்கள் யாவரும் 01.07.2008ம் திகதி முதல் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்த்தப்படுவர் என கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
முன்னைய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பிற்கமைய இலங்கை அதிபர் சேவை 2-I ல் உள்ளோர் புதிய சேவை பிரமாணக் குறிப்பிற்கமைய இலங்;கை அதிபர் சேவை இரண்டாம் வகுப்பிற்கு உள்வாங்கப்பட்ட போதும் அவர்களுக்கான சம்பள மாற்றங்களை செய்ய முடியாமல் இருந்தது.
இது தொடர்பாக தேசிய சம்பள ஆணைக்குழு, தாபனப்பணிப்பாளர் நாயகம் ஆகியோருடனும் அரச சேவை ஆணைக்குழுவுடனும் கலந்துரையாடியதற்கமைய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் மாற்றம் செய்யப்பட்டு 2004/59ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி பத்திரிகை வெளியிடப்பட்டது.
இதற்கமைய இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கி அரச நிருவாக அமைச்சின் 28/2010ம் இலக்க சுற்றுநிரூபத்திற்கமைய 01.01.2011 முதல் நிலுவையுடன் உரிய சம்பளம் வழங்கப்படும்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அதிபர்களின் பெயர்ப்பட்டியல் வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்திற்கான பதவி உயர்வுக் கடிதம் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளதென இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கச் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment