ஜனாதிபதி மைத்திரிக்கு
ரஷ்யா கொடுத்த பொக்கிஷம்!
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யா சென்றுள்ளார்.
இதன்போது மொஸ்கோவில் உள்ள கிரம்ளின் மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதியால் சிறப்பு நினைவு பரிசொன்று இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
19 ஆவது நூற்றாண்டுக்குரிய கண்டி யுகத்தில் பயன்படுத்தப்பட்ட அரச வாளினை விளாடிமீர் புட்டின், மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியுள்ளார். இவ்வாறு வழங்கப்பட்ட வாள் 1906 ஆண்டளவில் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு நடைபெற்ற Sotheby எனப்படும் புராதனப் பொருட்கள் ஏல விற்பனையில் குறித்த வாள் ரஷ்யாவினால் கொள்வனவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த வாள் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினால், இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment