வில்பத்து சரணாலயத்தின் நான்கு ஏக்கர்
பாதுகாப்பு காட்டுப் பகுதி பாதுகாப்பு வனப் பிரதேசம்
- வர்த்தமானி அறிவிப்பு
வில்பத்து சரணாலயத்தின் வடக்கில் அமைந்துள்ள நான்கு ஏக்கர் பாதுகாப்பு காட்டுப் பகுதியை பாதுகாப்பு வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை ரஷ்யாவுக்கான விஜயத்தின் போது மொஸ்கோ நகரில் வைத்து கைச்சாத்திட்டுள்ளார்.
இதன் கீழ் வில்பத்து சரணாலயத்தின் வடக்கில் அமைந்துள்ள பிரதேசம் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உட்பட்ட மாவில்லு, வெப்பல், கரடிகுழி, மறிச்சக்கட்டி, விலச்சிக்குளம், பெரியமுறிப்பு ஆகிய வனப் பிரதேசங்களை ஒன்றிணைத்து மாவில்லு பாதுகாப்பு வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் எல்லை மாற்றப்பட வேண்டுமாயின் வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக இதனை செய்ய முடியும். துறைசார்ந்த அமைச்சின் நடவடிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பின் பின்னேரே இடம்பெறும்.
இதற்கமைவாக சம்பந்தப்பட்ட வனப் பகுதிக்கு ஆகக்கூடிய சட்ட கட்டமைப்பின் கீழா பாதுகாப்பு கிடைத்துள்ளது. வில்பத்து சரணாலயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வனப் பகுதியை அழிக்கப்படுவதாக கடந்த காலப் பகுதியில் பல்வேறு ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படிருந்தன.
இருப்பினும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து 2012, 2013ஆம் ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டிருந்த காணிகளுக்கு மேலதிகமாக வேறெந்த காணிகளும் அழிக்கப்படவில்லை என்ற விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment