மாணவர்களின்றி, கட்டிடமுமின்றி ஆசிரியர்களுக்கு
சம்பளம் வழங்கும்
அவலநிலை!
(அஸ்லம்)
கிழக்கு
மாகாண சபைக்குட்பட்ட
பாடசாலையொன்றில் மாணவர்களின்றி, கட்டிடமுமின்றி
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் அவலநிலை கடந்த
மூன்றாண்டுகளாக இடம்பெற்று வருகின்றபோதும் அதனை மாகாண
அதிகாரிகள் கண்டும், காணாதது போல் ஒரு
கௌரவப் பிரச்சினையாக
எடுத்துக் கொண்டுள்ளனர்.
அம்பாறை
கல்வி வலயத்தைச்
சேர்ந்த அம்பாறை
தமிழ் மகா
வித்தியாலத்திலேயே இந்த அவல நிலையேற்பட்டுள்ளது. கல்லோயா குடியேற்ற காலத்தில் 1956ம்
ஆண்டு காலப்பகுதியில்
அம்பாறையில் தமிழர்கள் நிறைந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட
இப்பாடசாலை தற்போது கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.
இப்பாடசாலையின்
கட்டிடம் யாவும்
இளைஞர் படையணியின்
பயிற்சிக்கென கையகப்படுத்தப்பட்ட போதும் ஒரு அறைக்குள்
பாடசாலை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் எவருமின்றி
ஒரு அதிபரும்,
ஒரு முஸ்லிம்
ஆசிரியையும் உள்ளனர். இவர்களுக்கு மாதமொன்றிற்கு சம்பளமாக
கல்வியமைச்சால் 1,25,000 ரூபா வழங்கப்படுகிறது.
ஆனால் வேலை
எதுவுமில்லை.
தாம்
கற்பிக்க வசதியாக
தம்மை வேறு
பாடசாலைகளுக்கு மாற்றுமாறு அவர்கள் பல தடைவைகள் கோரியும் கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சோ அம்பாறை
வலயக்கல்வி அலுவலகமோ கௌரவப்பிரச்சினைக்காக
மறுத்து வருகிறது.
ஒரு தமிழ்
பாடசாலையை மூடிவிட்டோமே
என்கிற கௌரவச்சிக்கலில்
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சும்,
அம்பாறை வலயக் கல்வி அலுவலகமும்
மாட்டிக்கொண்டுள்ளது.
இலங்கையில்
மாணவர்கள் எவருமின்றி
இயங்கும் பாடசாலையும்,
மாணவர்கள் எவருமின்றி
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் பாடசihலயும்
இதுவாகத்தான் இருக்குமென இலங்கை கல்வி நிருவாக
சேவை சங்க
செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.