8224 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை!
2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இம்முறை சாதாரண தர பரீட்சையில் 8224 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் அதிசிறந்த (A) சித்திகளை பெற்றுள்ளனர்.
2015ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 6102 ஆக காணப்பட்டதென பரீட்சை ஆணையாளர் நாயகம் W.M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை சாதாரண தர பரீட்சையில் கணிதம் மற்றும் வரலாறு பாடத்தில் சிறப்பு சித்திகளை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய 28877 மாணவர்கள் கணிதப்பாடத்தில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை கடந்த
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 7.63 வீத அதிகரிப்பாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்றவர்களின் விகிதம் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும்போது உயர்மட்டத்தில் காணப்படுவதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் எண்ணிக்கையும் இம்முறை அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர்; சுட்டிக்காட்டியுள்ளார்.
காலம் தாழ்த்தாமல் பெறுபேறுகளை விரைவில் வெளியிடக் கிடைத்தமைக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெப் கணனியை வழங்கும் சமகால அரங்கத்தின் செயற்றிட்டத்தின் மூலம் இன்றைய தினம் சித்திபெற்றுள்ள மாணவர்கள் முதல் கட்டமாக பயனடையவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளதுடன் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்ப்பட்டுள்ளதாவது:
விரைவில் பெறுபேறுகளை வெளியிடும் பொறிமுறை தற்போது வகுக்கப்பட்டுள்ளது. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் தாய்நாட்டுக்கு சேவையாற்ற முன் வருவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள தவறியுள்ள மாணவர்களின் திறனை நாட்டின் எதிர்காலத்திற்காக செயல்திறனான முறையில் பெற்றுக் கொள்வதற்கும் மிகவும் தீர்மானம் மிக்க கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தரம் 13 வரை தொடர்ச்சியாக கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கும் பரீட்சார்த்த செயற்றிட்டம் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும். 2019ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment