29 ஆம் திகதி
புதன்கிழமை முதல்
நாடுதழுவிய
ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்
மீண்டும்
டெங்கு ஒழிப்பு
வாரமொன்றை பிரகடனப்படுத்துமாறு
சுகாதார போசாக்கு
மற்றும் சுதேச
வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதன்
காரணமாக மீண்டும்
எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
.திருகோணமலையை
கேந்திரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு
வாரம் இன்றும்
இடம்பெறும். முப்படை சிவில் பாதுகாப்புப்படை சுகாதார
அதிகாரிகள் உள்ளிட்ட பல குழுவினர் இந்த
வேலைத்திட்டத்தை கடந்த 22ம் திகதி ஆரம்பித்தனர்.
நேற்று
முன்தினம் வரை
முன்னெடுக்கப்பட்ட இதன் கீழான
நடவடிக்கையில் 17 ஆயிரத்து 531 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
டெங்கு
குடம்பிகளைக் கொண்ட 274 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
169 பேருக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
0 comments:
Post a Comment