தொழிலை இழந்தோருக்கு மேன்முறையீடு செய்யும் காலம்
டிசம்பர்
31ம் திகதிவரை நீடிப்பு
பொது நிருவாக அமைச்சு சுற்றுநிரூபம்
(அஸ்லம்)
1983 ஜூலைக்கலவரம் மற்றும் அதற்குப் பின்னரான
காலப்பகுதியான 2009 மே மாதம்
18ம் திகதி
வரை நாட்டில்
நிலவிய அசாதாரண
சூழ்நிலை காரணமாக
தொழில்களை இழந்தவர்களுக்கு
தமது தொழிலை
மீளப்பெற்றுக்கொள்ளும் வகையில் மேன்முறையீட்டை
சமர்ப்பிக்க வேண்டிய கால எல்லையை இவ்வருடம்
டிசம்பர் 31ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது நிருவாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான
அனுமதியை அமைச்சரவை
வழங்கியுள்ளதாக பொது நிருவாக அமைச்சு தமது
04ஃ2006(ஐஐ)
ம் இலக்க
சுற்றுநிரூபம் மூலம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டிற்கான
காலம் ஏற்கனவே
2006 டிசம்பருடன் முடிக்கப்பட்டது. இது இவ்வருடம் முடியும்
வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெளிநாடுகளில்
உள்ளோர் இலங்கை
அரச சேவையில்
கடமையாற்றியிருப்பின் மீளவும் இணைந்துகொள்ள
முடியும்.
உள்நாட்டிலும்
பயங்கரவாத பிரச்சினைகள்
காரணமாக கடமைக்கு
செல்ல முடியாமல்
போனதால் அரச
தொழிலை இழந்தோர்
மேற்குறிப்பிட்ட கால எல்லையை மையமாக வைத்து
மேன்முறையீடுகளை சமர்ப்பித்து மீளவும் இணைந்து கொள்ள
முடியும்.
கிழக்கு
மாகாணத்தில் கல்வித்துறையில் இவ்வாறான காரணங்களினால் தொழிலை
இழந்தோர் கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சிற்கு தமது மேன்முறையீடுகளை சமர்ப்பித்து
நிவாரணம் கோர
முடியுமென இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரிகளின்
சங்க செயலாளர்
ஏ.எல்.எம்.முக்தார்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment