மாணவர்களின் பரீட்சை அடைவுகளுக்கு
வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உரிமை கோரக்கூடாது
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம்
(அஸ்லம்)
பாடசாலைப்
பொதுப்பரீட்சைகளில் பாடசாலைகளின் அடைவு
மட்டம் அதிகரிக்கும்
போது அதற்காக
பாடுபட்ட ஆசிரியர்களை
கௌரவிக்கும் மனப்பக்குவத்தை வலயக்கல்விப்
பணிப்பாளர்கள் கொண்டிருக்க வேண்டுமே தவிர பாடசாலைகளின்
பரீட்சை முடிவுகளை
தமது பரீட்சை
முடிவுகளாக தமது காலத்தில்தான் இவ்வாறான பரீட்சை
முடிவுகள் அடைய
முடிந்ததாக அறிக்கைகள் விடுவது கல்வி நிருவாகிகளுக்கு
அவமானகரமான செயலாகும். இவ்வாறு இலங்கை கல்வி
நிருவாக சேவை
அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளர்
ஏ.எல்.எம்.முக்தார்
அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பாக அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது
வெளியாகியுள்ள க.பொ.த (சாhதாரண தர)
பரீட்சை முடிவுகளின்
அடிப்படையில் சில பாடசாலைகள் கூடுதலான மாணவர்களை
ஏ தரத்தில்
சித்தியடைய வைத்துள்ளன. இதற்காக பாடசாலை மட்டத்தில்
பல்வேறு செயற்பாடுகளை
ஆசிரியர்களும், அதிபர்களும் முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை
மாவட்டத்தில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் சம்மாந்துறை
முஸ்லிம் தேசிய
பாடசாலையில் 14 மாணவர்கள் ஒன்பது ஏ பெற்று
மாவட்டத்தில் முன்னிலை வகிக்கின்றனர். இந்த சாதனைக்கு
அப்பாடசாலை ஆசிரியர்களால் செயற்படுத்தப்பட்ட
ஒன்பது ஏ
விசேட செயற்றிட்டமும்,
இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெற்றார் வழங்கிய
ஒத்துழைப்பு, மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் அவர்கள்
தனது நிதி
ஒதுக்கீட்டின் மூலம் வழங்கிய நிதி என்பனவற்றைக்
கொண்டே இவ்வடைவு
மட்டத்தை எட்டியுள்ளனர்.
ஆனால்,
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் இச்சாதனை தன்னால்
நிகழ்த்தப்பட்டது என தம்பட்டம் அடித்துள்ளதுடன் கைத்தொலைபேசி
மூலமாக குறுஞ்செய்திகளையும்
அனுப்பி வைத்துள்ளார்.
இது சிறுபிள்ளைத்தனமான
வேலை. உண்மையாக
இச்சாதனைக்காகப் பாரட்டப்பட வேண்டியது சம்மாந்துறை தேசிய
பாடசாலை ஆசிரியர்களும்
அதிபருமாவர் என்பதை இங்கு ஆணித்தரமாக கூற
வேண்டியுள்ளது.
கடந்த
காலங்களில் சம்மாந்துறை வலயத்தில் மாணவர்கள் பெற்ற
உயர்ந்த அடைவுக்காக
சம்மாந்துறை பொது இயக்கங்களையும், பள்ளிவாயலையும் தூண்டி
தமக்கு மாலையிட்டு;க் கொண்ட
வரலாறையும் இவ்வலயக்கல்விப் பணிப்பாளர்
செய்தமையை இங்கு
சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எனவே,
மாணவர்களின் அடைவுக்கு ஆசிரியர்களைப் பாராட்டும் பக்குவத்தை
வலயக்கல்விப் பணிப்பாளர்கள் வளர்த்துக்கொள்ள
வேண்டும். இதுவே
தர்மமுமாகும்.
0 comments:
Post a Comment