டெங்கு ஒழிப்பு வாரத்தின் முதல் நாள்
83 ஆயிரம் இடங்கள் பரிசோதனை
டெங்கு ஒழிப்பு வாரம் அமுலாகிய முதல் நாளான நேற்றைய தினம் 83 ஆயிரம் இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலணியும், சுகாதார அமைச்சும் இணைந்து நடத்தும் இந்த பரிசோதனை நடவடிக்கையின்போது 537 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூவாயிரம் குழுக்கள் இந்த பரிசோதனை நடவடிக்கையில் இணைந்துள்ளன.
பாடசாலை வளாகங்களிலும், மதவழிபாட்டு தலங்களிலும் டெங்கு நுளம்புகள் உருவாகும் அபாயம் அதிகளவில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அபாய வலையங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் இனம் காணப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment