நாட்டிலுள்ள  அரச பாடசாலைகளில் கடமையாற்றும்

ஆசிரியர்களின் எண்ணிக்கையும் மாணவர்களின் தொகையும்

கல்வி அமைச்சின் புள்ளிவிபரம் தெரிவிப்பு



எமது இலங்கை நாட்டில் அரச பாடசாலைகளில் மொத்தமாக 2 இலட்சத்து 32 ஆயிரத்து 555 ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி போதனைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இறுதியாக வெளியிட்டுள்ள புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
மொத்த ஆசிரியர்களில் 99 ஆயிரத்து 724 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் 1 இலட்சத்து 27 ஆயிரத்து 857 பேர் பயிற்றப்பட ஆசிரியர்களாகவும் 2 ஆயிரத்து 426 பேர் பயிற்சியற்ற ஆசிரியர்களாகவும் 1 ஆயிரது 887 பேர் பயிலுநர் ஆசிரியர்களாகவும் ஏனைய ஆசிரியர்களாக 661 பேரும் இருந்து கொண்டிருக்கின்றனர்.


எமது நாட்டில் மொத்தமாக 10162 பாடசாலைகள் உள்ளன. இப்பாடசாலைகளில் 1016 பாடசாலைகள் 1AB பாடசாலைகளாகவும் 1805 பாடசாலைகள் 1C பாடசாலைகளாகவும் 3408 பாடசாலைகள் Type 2  பாடசாலைகளாகவும் 3933 பாடசாலைகள் Type 3 பாடசாலைகளாகவும் உள்ளன.
இப்பாடசாலைகளில் 6338 பாடசாலைகளில் சிங்கள மொழி மூலமும் 2989 பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமும் 66 பாடசாலைகளில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளிலும் 554 பாடசாலைகளில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 168 பாடசாலைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 47 பாடசாலைகளில் தமிழ்,சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் கல்வி போதனைகள் இடம்பெறுகின்றன.
மொத்தமாக உள்ள 10162 பாடசாலைகளில் 353 தேசிய பாடசாலைகளாகவும் 9809 மாகாணப் பாடசாலைகளாகவும் உள்ளன.
இப்பாடசாலைகளில் ஒரு ஆசிரியர் மாத்திரம் கல்வி கற்பிக்கும் 27 பாடசாலைகள் உள்ளன. இது போன்று 108 பாடசாலைகளில் 2 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர். 3013 பாடசாலைகளில் 3 தொடக்கம் 9 வரை எண்ணிக்கையிலான      ஆசிரியர்களும் 4373 பாடசாலைகளில்  10 தொடக்கம் 25 வரை எண்ணிக்கையிலான      ஆசிரியர்களும் 1748 பாடசாலைகளில் 26 தொடக்கம் 50 வரை எண்ணிக்கையிலான      ஆசிரியர்களும் 669 பாடசாலைகளில் 51 தொடக்கம் 100 வரை எண்ணிக்கையிலான      ஆசிரியர்களும் 224 பாடசாலைகளில் 101 மேற்பட்ட எண்ணிக்கையான ஆசிரியர்களும் கல்வி கற்பிக்கின்றனர்.

இப்பாடசலைகளில் மொத்தமாக 4,143,330 மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருக்கிறார்கள். இம்மாணவர்களில் 2,052,188 பேர் ஆண்களாகவும் 2,091,142 பேர் பெண்களாகவும் உள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top