காணாமல் போன
ஹெலிகாப்டர்
மலையில் மோதி வெடித்து சிதறியது
ஒரே குடும்பத்தை
சேர்ந்த ஐந்து பேர் பலி
பிரித்தானியாவில்
காணாமல் போன
ஹெலிகாப்டர் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த
ஒரே குடும்பத்தை
சேர்ந்த ஐந்து
பேர் பிணமாக
மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hulcote பகுதியை சேர்ந்த கெவின் என்ற
தொழிலதிபர் தனக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மனைவி
உட்பட குடும்பத்தினர்
மூன்று பேருடன்
டப்ளினில் உள்ள
Christeningக்கு பயணித்துள்ளார்.
பயணத்தின்
போது ஹெலிகாப்டர்
ஐரிஷ் கடல்
பகுதிக்கு அருகே
காணாமல் போயுள்ளது.
தகவலறிந்து
சம்பவ இடத்திற்கு
விரைந்த மீட்பு
குழுவினர் காணாமல்
போன ஹெலிகாப்டரை
தேடும் பணியில்
ஈடுபட்டனர்.
தேடுதல்
பணி தொடர்ந்த
நிலையில் Snowdonia பகுதிக்கு அருகே
சிதைந்து கிடந்த
ஹெலிகாப்டரை தீயணைப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதே
சமயம், ஹெலிகாப்டரில்
பயணித்த கெவின்
உட்பட ஐந்து
பேரின் உடல்களையும்
பொலிசார் மீட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்
செயலிழந்து Rhinog மலையில் மோதி
விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை
விபத்திற்கான காரணம் வெளியாகவில்லை.
கெவின்-ரூத் தம்பதிக்கு
ஆறு குழந்தைகள்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஆறு
குழந்தைகளும் பெற்றோர்களை இழந்துள்ள சம்பவம் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.