வில்பத்து வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி
முசலி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரி பிரதேச மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் முசலி பிரதேசத்திலுள்ள 22 கிராமங்களின் மக்களும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பூர்வீக நிலங்களே காடுகளாக மாறியுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் தமது வீடுகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல வருடகாலமாக நாங்கள் வாழ்ந்த காணிகளை வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அம்மக்கள்கவலை வெளியிட்டுள்ளனர்.
மரிச்சுக்கட்டி,
பலைக்குளி, கரடிக்குளி, கொண்டச்சி, அகத்திமுறிப்பு மற்றும் வேப்பங்குளம் ஆகிய பிரதேசங்களே, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment