கல்குடாவில் சாராய தொழிற்சாலை,
சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதியா..??
மட்டக்களப்பு
மாவட்டம் கல்குடா
பிரதேசத்தில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை ஒன்று
அமைக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.இலங்கையில்
எத்தனையோ பிரதேசங்கள்
இத் தொழிற்
சாலையை அமைத்துக்கொள்வதற்கான
சாதக நிலையில்
உள்ள போதும்
ஏன் சிறுபான்மையினர்
வாழும் கல்குடாவை
தெரிவு செய்தார்கள்.
இத்
தொழிற்சாலையானது இலங்கை மத்திய வங்கி ஆளுநரின்
மருமகன் அமைத்து
வருவதாக தகவல்
கிடைத்துள்ளது. மத்திய வங்கி ஆளுநர் யாரின்
ஆதரவாளர் என்பது
அனைவருக்கும் நன்கு தெரியும்.
இந்த
அரசாங்கமானது போதை வஸ்துவிற்கு எதிரான நிலைபாட்டை
கொண்டது போன்ற
வெளிப்பூச்சை வைத்துக் கொண்டு உள்ளுக்குள் போதைப்
பொருளுக்கு சார்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளதை இதனூடாக
அறிந்து கொள்ளலாம்.இவ்வரசு அனைத்து
விடயங்களிலும் இவ்வாறு இரட்டை வேடம் பூண்டே
செயற்பட்டு வருகிறது.
இதுவே
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவின்
காலத்தில் இடம்பெற்றிருந்தால்
இது சிறுபான்மையினருக்கு
எதிராக மஹிந்தவினால்
திட்டமிட்ட சதி என்ற கதையை பரப்பி
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்தவின் நாமத்தை களங்கப்படுத்தியிருப்பார்கள்.அன்று இவ்வாறான
விடயங்களை நாட்டை
ஆண்ட ஆட்சியாளர்களின்
தலையில் போட்டவர்கள்
இன்று அவ்வாறு
எதனையும் செய்யாதது
ஏன்?
இந்
நிலையம் அமைக்கப்படும்
போது கல்குடாவை
அண்டிய சூழலில்
தற்போது காணப்படும்
கலாச்சாரத்தில் பாரிய தாக்கம் செலுத்தும்.மது
அருந்துதல் என்பது இன்று வங்கிகளினூடாக எவ்வாறு
முஸ்லிம்களிடையே வட்டி நுழைக்கப்பட்டு அது ஒரு
பாவமல்ல என்ற
நிலைக்கு சாதாரணமாக
வந்துள்ளதோ அந் நிலைக்கு மது அருந்துதல்
வர இந்
நிலையம் களம்
அமைத்து கொடுக்கும்.
இந்த
அரசாங்கம் முஸ்லிம்கள்
அதிகம் வாழும்
இறக்காமத்தில் புத்தர் சிலையை நிறுவி தனது
மத ஆதிக்கத்தை
ஒரு வழியில்
காட்டுகிறது.கிழக்கில் புராதன இடங்கள் உள்ளதாக
கூறி இன்னுமொரு
வகையில் முஸ்லிம்களின்
வாழ்விடங்களை நோக்கி காய் நகர்த்துகிறது.இவ்வாறான
மதுபான உற்பத்தி
நிலையங்களை அமைப்பதன் மூலம் கலாச்சார சீரழிவை
ஏற்படுத்த முனைகிறது.இப்படி பல்கோண
இனவாத தாக்குதல்கள்
இவ்வாட்சியில் இடம்பெறுகின்ற போது இவ்வாட்சியின் உண்மையான
முகத்தை சிறுபான்மை
இனத்தவர்களில் பலர் அறியாமல் உள்ளமை தான்
கவலையான விடயமாகும்.
அ.அஹமட்
0 comments:
Post a Comment