மினுவாங்கொடை வஸீலா எழுதிய
‘மொழியின் மரணம்’ நூல் வெளியீடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்லொலுவை, மினுவாங்கொடை வஸீலா எழுதிய ‘மொழியின் மரணம்’சிறுகதைதொகுதியின் அறிமுக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணிக்கு நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியில் நடைபெறும்.
நீர்கொழும்பு முகர்ரமா சர்வதேச பாடசாலை மற்றும் நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், கௌரவ அதிதியாக இந்திய பூவரசி பதிப்பகத்தின் பணிப்பாளர், எழுத்தாளர் ஈழவாணி, விசேட அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபன தமிழ் செய்திப் பிரிவு பணிப்பாளர் யூ.எல் யாகூப், கலாபூணம் மு.பஷீர், லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களின் ஆலோசகர் எம். ஏ. எம். நிலாம், நவமணிப் பத்திரிகையின் ஆசிரியர் பீட உறுப்பினர் காவ்யாபிமானி கலைவாதி கலீல் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
அல் -ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.எம். இர்ஷாத் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வதோடு, விழாவை வசந்தம் எப்.எம். அறிவிப்பாளர் ஏ. எம். அஸ்கர் தொகுத்து வழங்குகிறார்.
இந்த சிறுகதைத் தொகுதிக்காவே அண்மையில் உலக பல்கலைக்கழகம் (அமெரிக்கா) பரிசு வழங்கிக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் எவரும் கலந்து கொள்ள முடியும் என்பதால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் அன்பாய் அழைப்பு விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment