சுற்றுலா சென்றபோது பனிச்சரிவில் சிக்கி
8 மாணவர்கள் பலி?
ஜப்பான் நாட்டில் கல்விச் சுற்றுலா சென்றபோது பனிச்சரிவில் சிக்கி 8 மாணவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள Nasu Onsen என்ற பகுதியில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை 60 மாணவர்கள் இப்பகுதியில் சுற்றுலா சென்றபோது பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளனர். சுமார் 9.20 மணியளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், இதில் பலர் சிக்கிக்கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மீட்புக் குழுவினர் தெரிவித்திருப்பதாவது, சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஆராயும்போது 8 பேர் வரை பலியாகியிருக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், 30 பேருக்கு காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எஞ்சிய மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கல்விச்சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த விபத்தில் மாணவர்கள் பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ஜப்பான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment