நல்லிணக்கம் தொடர்பான புதிய கல்வி பிரிவு


நல்லிணக்கம் தொடர்பான புதிய கல்வி பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் கல்வியமைச்சும்; இணைந்து இதளை ஆரம்பித்துள்ளன.
மாணவர், மாணவிகள் மத்தியில் தேசிய ஐக்கியம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதற்காக தற்பொழுது சகோதார பாடசாலை திட்டம், மதம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  ஆசிரியர்களுக்காக விசேட பயிற்சி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட பாடசாலையின் மூலம் முன்னெடுக்கக் கூடிய திட்டங்களும் இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை தலைவியாக கொண்டு செயல்படும் சமாதானம் மற்றும் நல்லிணக்க பிரிவு கல்வி அமைச்சுடன் இணைந்து மேற்படி விசேட பிரிவை கல்வி அமைச்சில் ஸ்தாபித்துள்ளனர்.
தாம் கல்வி அமைச்சராகவிருந்தபோது சமாதானம் மற்றும் நல்லிணக்க பிரிவு கல்வி அமைச்சின் விசேட பிரிவு செயல்பட்டு வந்ததாகவும் பின்னர் அது செயலிழந்து விட்டதாகவும் மீண்டும் அப்பிரிவு கல்வி அமைச்சில் ஸ்தாபிக்கப்பட்டதையிட்டு தாம் பெருமைகொள்வதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துதெரிவித்தபோது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கல்வி அமைப்பினூடாக ஸ்திரமான தீர்மானங்கள் மேற்கொள்வதையிட்டு விசேடமாக பெருமையுடன் மேற்கோள்காட்டினார்.

இனங்களுக்கிடையிலேயான ஒற்றுமை மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பிரிவு பாரிய செயல்பாட்டினை கல்வி அமைப்பினூடாக தேசிய கொள்கையை நடைமுறைபடுத்துவதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் பெற்றுக்கொடுத்துள்ள பங்களிப்பினை மதிப்பதாகவும் கல்வி அமைப்பின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top