====================================================
””உயிர் தப்பினால்…….
ஒன்றை நினைத்துக்கொள்!
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்””
=======================================================
உலகை கண் கலங்க வைத்த ஒரு தாயின்
கடைசி நேரப் போராட்டம் (உண்மைக் கதை)
ஜப்பான் பூகம்பத்தின்போது ஒரு தாய் செய்த தியாகத்தைக் கூறும் உண்மைக்கதை இது !
பூகம்பத்தின் ஆக்ரோசம் குறைந்ததும் ஓர் இளம்பெண்ணின் வீட்டை அடைந்த மீட்புப் பணியாளர்கள் சிதைவுகளினுள்ளே அகப்பட்டுக் கிடந்த ஒரு உடலை கண்டனர், ஆனால் அந்த உடல் கிடந்த முறை வித்தியாசமாயிருந்தது. சிரமங்களின் மத்தியில் அக்குழுவின் தலைவர் உடலைப் பரிசோதித்து உயிர் உள்ளதா எனப் பார்த்தார்.
ஆனால் அப்பெண் ஏற்கனவே உயிரை விட்டிருந்தாள் மீட்புப் பணியாளர்கள் அந்த வீட்டை விட்டு ஏனைய வீடுகளிலும் மீட்புப் பணியைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள் ஏதோ ஒரு உந்துதலினால் அக்குழுவின் தலைவன் அந்த வீட்டுக்கு மீண்டும் வந்தான் உயிரற்ற பெண்ணின் உடலின் கீழே தெரிந்த இடைவெளியை பரிசோதித்த அவன் குழந்தை! இங்கே ஒரு குழந்தை!! என சப்தமிட்டான்.
முழு மீட்புப்பணியாளர்களும் ஒன்றாக இணைந்து சிதைவுகளை அகற்றினர். அந்த உயிரற்ற உடல் தடித்த துணியினால் சுற்றப்பட்ட மூன்று மாத குழந்தையை பாதுகாத்தவாறு இருந்தது. உண்மையில் அத்தாய் தன் குழந்தையை பாதுகாக்க ஓர் தியாகத்தை செய்திருந்தாள். பூகம்பத்தின்போது வீடு உடையத் தொடங்கியதும் தன் உடலைக் கவசமாகப் பயன்படுத்தி குழந்தையை காப்பாற்றியிருக்கிறாள்.
குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர் அக்குழந்தையின் போர்வையில் ஒரு தொலைபேசியைக் கண்டார்கள். அதன் திரையில் ஒரு செய்தி இவ்வாறு இருந்தது ………
====================================================
உயிர் தப்பினால்…….
ஒன்றை நினைத்துக்கொள்!
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்
=======================================================
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.