நல்லிணக்க, பொறுப்புக்கூறல்
கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு
இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம்
நல்லிணக்க,
மற்றும் பொறுப்புக்கூறல்
நடைமுறை குறித்த
கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு இரண்டு
வருட கால
அவகாசத்தை ஐக்கிய
நாடுகளின் மனித
உரிமைகள் பேரவை
வழங்கியுள்ளது.
இலங்கைக்கு இரண்டு
வருட கால
அவகாசத்தை வழங்கக்கோரி
சமர்ப்பித்திருந்த தீர்மானம் ஐக்கிய
நாடுகளின் மனித
உரிமைகள் பேரவையில்
நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில்
நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துதல் என்ற
தொனிப்பொருளில் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கு
மொன்ரி நீக்ரோ,
பிரிட்டன், வட அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய
நாடுகள் அனுசரணை
வழங்கியிருந்தன. இந்தத் தீர்மானம் அங்கத்துவ நாடுகளின்
கருத்தொற்றுமையுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது.
ஜெனீவாவில்
நடைபெறும் ஐநா
மனித உரிமைகள்
பேரவையின் 34வது அமர்வு தொடர்பான கலந்துரையாடலில்,
இலங்கையின் சார்பில் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ
டி சில்வா
உரையாற்றினார்.
இந்தத்
தீர்மானத்தை நிறைவேற்றிய பேரவைக்கும், அங்கத்துவ நாடுகளுக்கும்
பிரதியமைச்சர் நன்றி தெரிவித்தார். உண்மையைக் கண்டறிதல்,
கடந்த கால
தவறுகளைத் திருத்துதல்,
நீதியை நிலைநாட்டல்
போன்றவை அடங்கலான
நல்லிணக்க நிகழ்ச்சி
நிரலை அமுலாக்குவதில்
இலங்கை அரசாங்கம்
திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதியமைச்சர்
குறிப்பிட்டார். இந்த நடைமுறைக்கு உலக நாடுகள்
தொடர்ந்து உதவி
செய்ய வேண்டுமென
அவர் கோரிக்கை
விடுத்தார்.
0 comments:
Post a Comment