கிண்ணியாவிலும் அடிக்கல் நட முஸ்திபு?

இங்கு யார் ஏமாளிகள்?.. கோமாளிகள்?..

(முர்சித் முஹம்மது)


கிண்ணியா தள வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை நாளாந்தம் முன் வைக்கின்ற போதிலும் அது எட்டாக்கனிக்கு கொட்டாவி விடுகின்ற காட்சியாகவே இருந்து வந்தது.

என்றாலும் கிண்ணியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து மக்கள் இன்னல் நிலையில் இருக்கையில் அவர்களுடைய அத்தியவசிய தேவைகளில் பலரும் கரிசணை கொண்டு செயற்படுகின்றினர்.

அதன் முதற்கட்ட வேலையாக கடந்த வாரம் அமைச்சர் றிஸாத் பதியுதீன் கிண்ணியா வந்தார். இப்போது இரண்டாவது தடவையாக நேற்று புதன் கிழமை(22) மீண்டும் கிண்ணியா வந்துள்ளார்.

ஏற்கனவே கிண்ணியா வந்த அவர் மக்கள் சந்திப்பின் போது வாக்களித்தபடி 7.9 மில்லியன் பணமும், மருந்துப் பொருட்கள் கொள்கலனாக இரண்டு கன்டைனர்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களையும் கிண்ணியாவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

நேற்று (22) கிண்ணியா வந்த அவருடைய நோக்கம் கிண்ணியா வைத்தியசாலையை சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக மாற்றியமைப்பதாகும்.

மாத்திரமன்றி இரண்டாம் கட்டமாக கிண்ணியா நகர சபையை அபிவிருத்தி செய்வதோடு தேவையான இயந்திரங்களையும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஏலவே சில வருடங்களுக்கு முன்னர் கிண்ணியா நகர சபைக்கு வழங்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தை வெறுமனே வாகனத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையை சரி செய்யாமல் குப்பைத்தொட்டிக்கு தாரை வார்த்துக் கொடுத்த கிண்ணியா நகர சபை நிருவல்கம், நகரசபைக்கென வருகின்ற உபகரணங்களை இனியாவது சரிவர பயன்படுத்த வேண்டும்.

அடுத்தது உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் குறித்த விடயத்தில் கரிசணை காட்டி பேசியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு கிண்ணியா மக்களின் அவல நிலையை எடுத்துக் கூறி கிண்ணியாவுக்கே நேரடியாக அழைத்துவந்த அமைச்சர் றிசாத்தின் கரிசனையையும் அக்கறையையும் கிண்ணியா மக்கள் ஒருபோது மறந்துவிடமாட்டார்கள் என நம்புகிறேன்.

ஆனால் கிண்ணியாவை பொருத்தவரைக்கும் பலரும் அரசியல் காலங்களில் கிண்ணியா புஹரி சந்தியில் மணிக்கூண்டு கோபுரம் அமைப்பதை பற்றியே தமது விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கிறார்கள். ஆனால் இதை யாரும் இதுவரை செய்யவில்லை.

அமைச்சர் றிஸாத்தின் வருகையின் பின்னர் கிண்ணியா அபிவிருத்தியின் பிரதான தேவையாக பார்க்கப்படுகின்ற  மணிக்கூண்டு கோபுரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமாயின் அதை கட்டுவது நானா நீயா என சில தலைமைகள் சண்டை பிடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் மீண்டும் ஒரு தடவை கோமாளிகளாக்கப்படலாம்.

எனவே இந்த மணிக்கூட்டு கோபுர விவகாரத்தை, அமைச்சர் றிஸாத்தின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் மக்களை கவர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் எதிர்தரப்பு அரசியல் கட்சிகள் தமது நாடக நகர்வையும் இட்டுச் செல்லுகின்ற போக்கு இருக்குமா இல்லையா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


அடிக்கல் நடுவதிலும், நினைவுத்தூபிகள் அமைப்பதிலும் வல்லவர்களாக செயற்படுகின்ற பல கட்சிகளுக்கு மத்தியில், அக்கட்சிகளும் மணிக் கூண்டுக் கோபுர விவகாரத்தை கையிலெடுப்பார்களானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அப்பாவி பொது மக்கள் தங்களை இன்னும் இன்னும் கோமாளிகளாகவும் ஏமாளிகளாகவும் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் சமயோசிதமாக நடந்து கொள்வார்களேயானால் அதுவும் சிறப்பான ஒன்றாக அமையலாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top