குழந்தைக்கு 'அல்லாஹ்' என்ற பெயரைச் சூட்டுவது குற்றமா?
வழக்கு தொடுத்திருக்கும் பெற்றோர்
அமெரிக்காவில் 'அல்லாஹ்' எனப் பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க மறுத்துள்ள அதிகாரிகளை எதிர்த்து பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஜோர்ஜியா மாகாணத்தில் Elizabeth Handy மற்றும்
Bilal Walk என்ற பெற்றோர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 22 மாதக் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் குழந்தைக்கு ZalyKha
Graceful Lorraina Allah எனப் பெயர் சூட்டினர்.
ஆனால், இந்தக் குழந்தையின் பெயரின் இறுதியில் 'அல்லாஹ்' என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
'குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் பெயரை இறுதியில் சேர்க்கலாம். ஆனால், அல்லாஹ் என்ற பெயர் அரபி மொழியில் உள்ள வார்த்தை.
இதை பயன்படுத்துவது ஜோர்ஜியா மாகாண சட்டவிதிகளுக்கு எதிரானது' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் கருத்தை பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
'அல்லாஹ் என்ற பெயர் புனிதமானது. இதை எங்களுடைய குழந்தைக்கு சூட்டுவதற்கு தடை விதிப்பது எங்களுடைய அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. பெற்றோரின் விருப்பப்படி குழந்தைக்கு பெயர் சூட்டுவது கூட குற்றமா?' எனப் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை காக்கும் அமைப்பு ஒன்றின் ஆலோசனைப்படி தற்போது பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment