இரண்டு வருடங்களுக்கு முன்..!!!
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம்
வழங்குவதில் எமக்கு எந்த தயக்கமுமில்லை
- முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
சாய்ந்தமருதுக்கு
தனியான உள்ளுராட்சி
மன்றம் வழங்குவதற்கு
எந்த தயக்கமும்
எம்டமில்லையென முஸ்லிம் காங்க்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது
பிரதேச செயலகத்தில்
இடம்பெற்ற கூட்டம்
ஒன்றின்போது சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றக்
கோரிக்கை தொடர்பில்
உங்கள் நிலைப்பாடு
யாது? என
ஊடகவியலாளர் ஒருவரால் வினவப்பட்டதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது
மக்களின் கோரிக்கை
தனியான உள்ளூராட்சி
மன்றம் என்றால்
அதனை நிறைவேற்றி
வைப்பதில் எந்த
தயக்கத்தையும் காட்டப்
போவதில்லை என்ற
உறுதிப்பாட்டையும் அமைச்சர் ரவூப்
ஹக்கீம் வழங்கினார்.
நகர
அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தேசியத் தலைவருமான
ரவுப் ஹக்கீமிற்கும்,
சாய்ந்தமருது அபிவிருத்தித் திட்டமிடல் குழுவுக்குமிடயிலான சந்திப்பு இன்று (2015.04.05) 5 ஆம் திகதி
காலை சாய்ந்தமருது
பிரதேச செயலகத்தில்
இடம்பெற்றது.
இச்சந்திப்பில்
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,
அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் எதிர்க்கட்சித்
தலைவர்
மெளலவி ஹனீபா மதனி, சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது
- மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா,டாக்டர் என்
ஆரீப், டாக்டர்
எம்.ஐ.எம் ஜெமீல்
மற்றும்
சாய்ந்தருது அபிவிருத்திக் குழு
அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment