பிரித்தானிய குட்டி இளவரசரை தனியார்பாடசாலையி சேர்க்க முடிவு
ஒரு கல்வி ஆண்டிற்கு 6,000 பவுண்ட்(11,35,468/=) வசூலிக்கப்படும்
பிரித்தானிய குட்டி இளவரசரான ஜோர்ஜை தனியார் பாடசாலையில் சேர்க்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய இளவரசரான வில்லியம் மற்றும் இளவரசியான கேட் மிடில்டன் ஆகியவர்களின் மூத்த மகன் ஜோர்ஜ். எதிர்வரும் யூலை மாதம் ஜோர்ஜிற்கு 4 வயது தொடங்குகிறது.
தற்போது Norfolk
நகரில் உள்ள Westacre Montessori என்ற நர்சரியில் ஜோர்ஜ் பயின்று வருகிறார்.
இந்நிலையில், குட்டி இளவரசர் ஜோர்ஜை தனியார் பாடசாலையில் சேர்க்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெற்றோர் வசித்து வரும் Kensington அரண்மனையில் இருந்து சில கி.மீ தூரத்தில் இருக்கும் Thomas's Battersea என்ற தனியார் பாடசாலையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பெற்றோர் வெளியிட்ட தகவலில், ‘இளவரசர் ஜோர்ஜின் கல்வி மிகவும் சிறப்பாக தொடங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக’ கருத்து தெரிவித்துள்ளனர்.
இளவரசர் ஜோர்ஜ் தங்களது பாடசாலையில் மாணவராக சேர்வது தங்களுக்கு கிடைத்த பெரிய மரியாதை என தனியார் பாடசாலையின் தலைமை ஆசிரியரான பென் தாமஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தனியார் பாடசாலையில் இளவரசர் பயில ஒரு கல்வி ஆண்டிற்கு 6,000 பவுண்ட்(11,35,468 இலங்கை ரூபாய்) வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Princess Diana with
William and Harry at Weatherby school in Notting Hill in 1989
|
0 comments:
Post a Comment