தனியார் தொலைக்காட்சியின்
26.ஆம் திகதிய அரசியல் நிகழ்ச்சி
ஊடகத் தர்மத்தை மீறிய தயாரிப்பு
வக்கிர எண்ணம் கொண்டவர்களின் உரையாடல்
நடுநிலையாளர்கள் கவலை தெரிவிப்பு
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் தொடர்பான (26.03.2017) நிகழ்ச்சியில் முற்று முழுதாக அமைச்சர் ரிஷாட்டை மையமாக வைத்தே கேள்விகளைக்
தொடுப்பதற்கும் அவரை நையாண்டி செய்து சிரிப்பதற்கும் என. சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைச் பாரூக், முன்னாள் பிரதி அமைச்சரும் மேயருமான பாயிஸ் ஆகியோரைத் தெரிந்தெடுத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
அழைத்திருந்தார்.
கடந்த. 2016.06.19
ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்ச்சியிலும் முற்று முழுதாக அமைச்சர் ரிஷாட்டை மையமாக வைத்தே கேள்விகள் தொடுக்கப்பட்டது. அதற்கு அவர் ஹுனைச் பாரூக், காதர் மஸ்தான், பாயிஸ் ஆகியோரைத் தெரிந்தெடுத்து அழைத்திருந்தார். சொப்பிங்க் பேக்குடன் வந்தவர் என்று கூறி கேள்வியையும் அன்று தொடுத்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களை முஸ்லிம் சமூகத்தில்
கொச்சைப்படுத்தப்படல் வேண்டும் என்ற முழு நோக்கத்துடன் அவர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்து நடத்துவாதாகவே உள்ளது என விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிடுவதுடன் தங்கள் ஆத்திரத்தையும்
தெரிவிக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டதாரிகள்
தொடர்ந்து 28வது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தயாரிக்கும் ஊடகவியலாளர் அந்த வேலையற்ற பட்டதாரிகளை நேரடியாகச் சென்று கருத்துக்களைப்
பெற்றுள்ளார். ஒளிப்பதிவும் செய்துள்ளார்
ஆனால், வக்கிர எண்ணம் கொண்ட இந்த நிகழ்ச்சி
தயாரிப்பாளரும் ஊடகவியலாளரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு இக்கால கட்டத்தில்
முக்கியத்துவம் கொடுக்காமல் அமைச்சர் ரிஷாட்டை
பழி வாங்கும் எண்ணத்திற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார் என்றும் மக்களால் கருத்துக்
கூறப்படுகின்றது.
26.03.2017ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்ச்சி நேரடியாக இல்லாமல் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பப்பட்டது.
உண்மையான நேர்வழியில் செயல்படும் படைத்தவனாகிய
இறைவனுக்கு அஞ்சிய ஒரு ஊடகவியலாளனாக நிகழ்ச்சி தயாரிக்கும் நபர் இருந்து கொண்டிருப்பாரேயானால்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்
கட்சியைச் சார்ந்த முக்கியஸ்த்தர் ஒருவரையும் அந்த இடத்தில் வைத்து உரையாடி இருக்க
வேண்டும். அதுதான் உண்மையான ஊடகத் தர்மம்
அப்படியில்லாமல் அவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களையும்
அவருக்கு எதிரான அரசியல் எதிரிகளையும் அழைத்து கருத்துக்களைக் கூற வைத்து ஊடகத் தர்மத்தை
மீறி பழி வாங்கும் எண்ணத்தில் இருக்கும் ஊடகவியளாளர் தனது வக்கீர எண்ணத்தை நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறார் என்ற கருத்தும் மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
நடுநிலையாக செயல்பட வேண்டிய ஒரு ஊடகவியலாளர் எவ்வாறு தனக்கு எதிரானவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகின்றார் என்பதற்கு இவரின் கேள்விகளும் கருத்துக்களும்
ஆதாரமாக இருப்பதைக் காணமுடியும் எனவு மக்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.
இவரின் இப்படியான செயல்பாட்டுக்கு நடுநிலயான மக்கள் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment