பரீட்சைத்திணைக்கள பாடசாலைப்பரீட்சைகள் தொடர்பான
பகுப்பாய்வில் தேசிய பாடசாலை, மாகாணப்பாடசாலை
என்ற அடிப்படையில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்
–
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரிக்கை
(அஸ்லம்)
பரீட்சைத்
திணைக்களத்தினால் நடாத்தப்படும் பாடசாலை மாணவர்களுக்கான க.பொ.த சாதாரண, உயர்தர
பரீட்சைகள் தொடர்பான அடைவு மட்ட பகுப்பாய்வு
நடவடிக்கைகளில் தேசிய, மாகாணப் பாடசாலைகள் என
மாற்றம் கொண்டு
வரப்பட வேண்டுமென
பரீட்சைத் திணைக்களம்
மற்றும் கல்வியமைச்சு
என்பவற்றிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி
கோரிக்கையை இலங்கை கல்வி நிருவாக சேவை
அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விடுத்துள்ளது.
மேற்படி சங்கத்தின்
கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அரசாங்க
பாடசாலைகள் தேசிய பாடசாலைகள், மாகாணப் பாடசாலைகள்
என வகைப்படுத்தப்பட்டுள்ள
போதிலும் பொது
பரீட்சைகள் சகல பாடசாலைகளுக்கும் பொதுவாக நடாத்தப்பட்டு
பரீட்சை அடைவு
மட்டம் தேசிய
மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் பொதுவாகப் பகுப்பாய்வு
செய்யப்படுகின்றது.
இப்பொதுப்பகுப்பாய்வானது
பாடசாலைகளின் உண்மையான அடைவுமட்டத்தையும்
பாடசாலைகளின் பலம், பலவீனங்களையும் வெளிப்படுத்துவதாக இல்லை. தேசிய பாடசாலைகளில் மாணவர்களின்
கற்றல் கற்பித்தல்களுக்கான
வளங்கள் தேவைக்கு
மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ள
நிலையில் மாகாண
பாடசாலைகளில் கற்றல், கற்பித்தலுக்கான வளங்கள் மிகவும்
குறைவாகவே கிடைக்கின்றன.
தற்போது
மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில்
இவ்வேறுபாடுகள் கவனத்திற் கொள்ளப்படாமல் பரீட்சை முடிவுகள்
பகுப்பாய்வு செய்யப்படுவதால் வளம் கூடிய தேசிய
பாடசாலைகளின் முடிவுகளுக்குள் ஏனைய பாடசாலைகள் மறைந்துகொண்டு
வலய மட்ட,
மாகாண மட்ட,
தேசிய மட்ட
முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
தேசிய
பாடசாலைகளின் பரீட்சை முடிவுகளும், மாகாணப்பாடசாலைகளின் பரீட்சை முடிவுகளும் தனித்தனியாக பகுப்பாய்வு
செய்யப்படுமானால் உண்மையான பரீட்சை அடைவு மட்டத்தை
கண்டுகொள்ளலாம். அதன் அடிப்படையில் பலவீனங்களுக்கான பரிகாரம்
காணப்படும் சாதாரணமாக பலம் பொருந்திய ஒருவரும்,
பலவீனமான ஒருவரும்
மோதிக்கொண்டால் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதனை
உணராமல் பலம்
கூடிய தேசிய
பாடசihலகளும்,
பலம் குறைந்த
மாகாணப் பாடசாலைகளும்
ஒன்றாக பகுப்பாய்வு
செய்யப்படுவது நடைமுறைக்கு சாத்தியமானதல்ல.
இவ்வேறுபாடுகள்
கவனத்திற் கொள்ளப்பட்டு
தேசிய மட்டத்தில்
தேசிய பாடசாலைகள்,
மாகாண பாடசாலைகள்
என்ற அடிப்படையிலும்
மாகாண மட்டத்தில்
தேசிய பாடசாலை,
மாகாணப்பாடசாலை என்ற அடிப்படையிலும் வலய மட்டத்தில்
தேசிய பாடசாலை,
மாகாணப்பாடசாலை என்ற அடிப்படையில் பரீட்சை பகுப்பாய்வு
மேற்கொள்ளப்பட வேண்டும்.
அண்மையில்
வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண
பரீட்சை முடிவுகளின்
அடிப்படையில் கிழக்கிலுள்ள ஒரு வலயத்தில் 19 மாணவர்கள்
சகல பாடங்களிலும்
'ஏ' தர
சித்திகளை பெற்றுள்ளனர்.
இவர்களுள் தேசிய
பாடசாலையில் 14 மாணவர்களும் ஏனைய மாகாணப்பாடசாலையில் 05 மாணவர்களும் 'ஏ' தர சித்தி
பெற்றுள்ளனர். ஆனால் குறித்த வலயத்தின் கல்விப்
பணிப்பாளர் வலயத்தின் சரித்திரத்தில் இவ்வளவு தொகையான
மாணவர்கள் ஒரே
தரத்தில் சித்தி
பெற்றதாகக் கூறியுள்ளார். உண்மையில் இவ்வலயத்தின் பரீட்சை
முடிவு தேசியப்பாடசாலைக்குள்
மாகாணப்பாடசாலை உள்ளடங்கி கூடிய மாணவர்கள் சித்தி
பெற்றதாகக் காட்டப்படுகிறது. உண்மையாக மாகாணப் பாடசாலையின்
அடைவுமட்டத்தை நோக்கும்போது வெறும் 05 மாணவர்களே அவ்வலயத்திலுள்ள
15ற்கு மேற்பட்ட
க.பொ.த சாதாரண
தர வகுப்புக்களைக்
கொண்ட பாடசாலைகளிலிருந்து
09 ஏ சித்திகளைப்
பெற்றுள்ளனர்.
மேற்குறித்த
உதாரணம் ஒன்றே
பரீட்சைத்திணைக்களத்தின் தற்போதைய பகுப்பாய்வு
எவ்வகையிலும் பொருத்தமற்'றது என்பதை எடுத்துக்காட்டப்
போதுமானது என
மேற்படி சங்கத்தின்
செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் பரீட்சை
ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment