கிழக்கு மாகாண கல்வியமைச்சு செயலாளரின் பெயர் தெரியாத
கல்முனை கல்வி வலயத்திலுள்ள வலயக்கல்விப் பணிப்பாளர்!
(அஸ்லம்)
கிழக்கு
மாகாணக் கல்வி
அமைச்சின் செயலாளரது
பெயர் தெரியாத
நிலையில் கல்முனைக் கல்வி மாவட்டத்திலுள்ள வலயக்
கல்விப்பணிப்பாளர் ஒருவர் தனது வலயத்திலுள்ள ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பான
கடிதங்களை வழங்கி வருகின்றார் என அறிவிக்கப்படுகின்றது.
Cover-up
duty அடிப்படையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் சம்மாந்துறை வலயக்கல்விப்
பணிப்பாளரே இவ்வாறு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின்
செயலாளரது பெயர்
தெரியாத நிலையில்
கடமையாற்றி வருவதாக இலங்கை கல்வி நிருவாக
சேவை அதிகாரிகளின்
கிழக்கு மாகாணச்சங்கச்
செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பாக அவர்
மேலும் தெரிவக்கையில்,
கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி சுமார்
இரு வருடங்களுக்கு
முன்னர் திருகோணமலை
மாவட்ட அரசாங்க
அதிபராக இடமாற்றம்
பெற்றுச் சென்ற
திரு. என்.ஏ.ஏ.புஸ்பகுமார என்பவர்
இன்னமும் கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளராக இருப்பதாகக் கருதிக்கொண்டு
கடந்த 28.02.2017ம் திகதியன்று அவ்வலயத்தைச் சேர்ந்த
ஒரு ஆசிரியைக்கு
சம்பளமாற்றக் கடிதத்தை வழங்கியுள்ளார்.
அக்கடிதத்தில்
'ஒப்பம் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, செயலாளர்,
கல்வி அமைச்சு,
கிழக்கு மாகாணம்'
எனக் குறிப்பிட்டு
கடிதம் வழங்கியுள்ளார்.
இது ஒரு
வெட்கக்கேடான விடயமாகும். ஏனெனில் வலயக்கல்விப் பணிப்பாளர்
ஒருவருக்கு தாம் கடமையாற்றும் மாகாணத்தின் கல்வியமைச்சின்
செயலாளர் யார்
என்று தெரியாது
கடமையாற்றும் ஒரேயொரு வலயக்கல்விப் பணிப்பாளர் இவராவார்.
கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளராக கடந்த 2015 ஜூலை
மாதம் முதல்
திரு. ஜே.எஸ்.டி.எம்.அசங்க
அபேவர்த்தன என்பவர் கடமையாற்றி வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
(கடிதம்
இணைக்கப்பட்டுள்ளது)
0 comments:
Post a Comment