180 கிராம் முட்டை இட்ட கோழி!
ஒன்ராறியோ சோல்ட் சென். மரிக்கு அருகாமையில் வசிக்கும் பொழுது போக்கு விவசாயி ஒருவர் கடந்த வாரம் ஆச்சரியமான கண்டுபிடிப்பொன்றை செய்துள்ளார். தனது கோழிகளின் முட்டைகளை சேகரிக்க சென்ற இவருக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.
டென்னிஸ் கொஸ்லோ என்பவரின் கோழிகளில் ஒன்று இட்டிருந்த முட்டையின் நிறை 180-கிராம்களாகும். பெரும் பந்தய பேஸ்பால் ஒன்றை விட பாரமானதாகவும் பெரிய அப்பிள் ஒன்றின் அளவைவிட அதிகமானதாகவும் இருந்தது அந்த முட்டை.
இத்தகைய பெரிய முட்டை ஒன்றை இதுவரை தன் வாழ்க்கையில் தான் காணவில்லை என கொஸ்லோ சிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
2009-ல் ஒட்டாவாவில் ஒரு கோழி 143-கிராம்கள் முட்டை ஒன்றை இட்டு செய்திகளில் பேசப்பட்டது.
கொஸ்லோவின் கோழி இட்ட முட்டை கனடிய வரலாற்றில் அதிக கனமான முட்டையாகும். துரதிஷ்டவசமாக உலக சாதனைக்கு இடமில்லை.
உலகில் அதிக கனமான முட்டை என சாதனை படைத்த கோழி முட்டை யுஎஸ்ஏ, நியு ஜேர்சியில் 1956-ல் கோழி ஒன்று இட்ட முட்டையாகும். இந்த முட்டை 454-கிராம்கள்.
கொஸ்லோ ஒரு சில டசின் கோழிகளை தனது வீட்டின் பின்புறத்தில் வளர்க்கின்றார். எந்த கோழி இம்முட்டையை இட்டதென தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.
இந்த முட்டையை என்ன செய்வதென அவரால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் முட்டையை உடைத்து உள்ளே மற்றொரு முட்டை இருக்குமா என கண்டறிய எண்ணுவதாக தெரிவிக்கின்றார்.
பெரும்பாலான விவசாயிகள் வழக்கமாக கோழிகள் இரண்டு வயதானதும் அவைகளின் முட்டைகளின் தரம் குறைந்து விடுவதால் கோழிகளை கொன்று விடுவார்கள்.
ஆனால் அவ்வாறு செய்ய தீர்மானிக்கவில்லை என கொஸ்லோ கூறியுள்ளார். தன்னால் அவ்வாறு செய்ய முடியாது. அவை எனது குழந்தைகள் என்று தெரிவித்துள்ளார். இரவில் தனது காரியாலயத்தில் கூடு ஒன்றில் அவைகளை தூங்க வைக்கின்றார்.
0 comments:
Post a Comment