இலங்கை ரசிகர்களுக்கு,
நடிகர் ரஜினிகாந்த் முக்கிய வேண்டுகோள்!
நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும் நேரம் கூடிவரும்போது சந்திப்போம் என நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் உள்ள தன் ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில், இலங்கைத் தமிழர்களுக்கு 150 வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக இருந்தார், நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததால், தன் பயணத்தை ரத்துசெய்தார். தமிழகத்தில் உள்ள சில கட்சிகளின் தரப்பில், ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருமாவளவன், வைகோ, வேல்முருகன் உள்ளிட்டோர் ரஜினியின் இலங்கைப் பயணத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, தனது பயணத்தை ரத்துசெய்தார், ரஜினி.
மேலும்,
'நான் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்து, தமிழக
மீனவர் பிரச்னை
குறித்துப் பேச இருந்தேன். இனிவரும் காலங்களில்,
இதுபோன்ற வாய்ப்புகள்
வரும்போது, அதை அரசியலாக்கி என்னைத் தடுத்துவிடாதீர்கள்'
எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில்,
இலங்கையில் உள்ள தன் ரசிகர்களுக்கு அவர்
கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
'நீங்கள் என்
மேல் வைத்திருக்கும்
அன்பை ஊடகங்கள்மூலம்
அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள்
இல்லை. நல்லதையே
நினைப்போம், நல்லதே நடக்கும்' என்று அவர்
கூறியுள்ளார். நேரம் கூடிவரும்போது சந்திப்போம் என
தனது கடிதத்தின்
வாயிலாக ரசிகர்களுக்கு
ஆறுதல் அளித்துள்ளார்
ரஜினிகாந்த்.
0 comments:
Post a Comment