சாய்ந்தமருது கரைவாகுவட்டை மூடப்பட்டு
சட்டவிரோத குடியிருப்புக் காணிகளாக மாற்றப்படுவதை தடுக்க
பாதிக்கப்பட்டோர் நீதிமன்ற உதவியை நாடுவதற்கான முயற்சியில்
(அஸ்லம்)
சாய்ந்தமருது
பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று குடற்கரை கிழல் கண்ட
நெற்காணிகள் சட்ட விரோதமான முறையில் அரசியல்வாதிகள்
மற்றும் அதிகாரிகளின்
துணையுடன் மூடப்பட்டு
குடியிருப்புக் காணிகளாக மாற்றப்பட்டு வருவதற்கெதிராக நீதிமன்ற
உதவியை நாடி
இதற்கான தடையுத்தரவைப்
பெறும் முயற்சியில்
பாதிக்கப்பட்டோரில் சிலர் ஈடுபட்டு
வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது
சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு பாதிக்கப்பட்டோர்
குழுவொன்றை அமைத்து தகவல் அறியும் சட்டத்திற்கமைய
கமநல சேவைகள்
திணைக்களம், பிரதேச செயலகம், முஸ்லிம் சமய
விவகாரத் திணைக்களம்
என்பவற்றிடமிருந்து காணிகள் தொடர்பான
தகவல்களைப் பெறுவதற்கும் மேற்படி
குழு முழு
மூச்சாக ஈடுபட்டு
வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
கரைவாகுப்பற்று
குடாக்கரை கிழல்
கண்டத்தில் கூடுதலான நெற்காணிகள் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு
கொள்வனவு செய்யப்பட்டு
மண்ணிட்டு நிரப்பப்பட்டு
காணிக்கொள்ளையர்களால் விற்கப்பட்டு வருகின்றன.
இதன்
காரணமாக கரைவாகு
ஆற்றின் வலது
கரையில் உள்ள
சாய்ந்தமருது பஸார் மற்றும் குடியிருப்புக்கள் வெள்ளம் காரணமாக மழை காலங்களில்
அமிழ்ந்து குடியிருப்பாளர்கள்
தமது இருப்பிடங்களை
விட்டு வெளியேறவேண்டிய
நிலையேற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மற்றுமொரு
வெல்லம்பிட்டி, கொலன்னாவ பிரதேசம் போன்று
சாய்ந்தமருது மாறி வருகின்றது.
சட்டவிரோத
மண் நிரப்பும்
வேலைகளை சாய்ந்தமருது
பிரதேச செயலகமும்
கமநல சேவை
திணைக்களமும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்து தடுத்து
நிறுத்தாதுள்ளனர்என அறிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இப்பிரதேசத்திலுள்ள பள்ளிவாயலுக்கு சொந்தமான நெற்காணியொன்றை
ஐந்து கோடி
50 இலட்சத்திற்கு கொள்வனவு செய்து அறுபத்தி நான்கிற்கு
மேற்பட்டோர் அதனை சட்டவிரோதமான முறையில் மண்ணிட்டு
குடியிருப்பு காணிகளாக மாற்றி கொள்ளை விலைக்கு
விற்க முயற்சித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது. மேலும், இக்காணி
வக்புச்சட்டத்தின் கீழ் பள்ளிவாயலுக்கு
ஒரு நன்கொடையாளர்
வழங்கியிருந்த போதும் வக்புச்சட்டத்திற்கு
முரணான முறையில்
பள்ளிவாயலுக்கு இக்காணியை விற்க அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment