தரையிறங்கும் போது தீப்பிடித்த போயிங் விமானம்
- பயணிகள் அலறல்
பெரு நாட்டில் பயணிகள் விமானமானது தரையிறங்கும் போது இறக்கைகளில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரு நாட்டில் ஜாவுஜா நகரில் இருக்கும் அண்டீன் விமான நிலையத்திற்கு நேற்று மாலை உள்ளுர் நேரப்படி 4.30 மணிக்கு தலைநகர் லிமாவில் இருந்து 141 பயணிகளை சுமந்து கொண்டு வந்த போயிங் ரக விமானம், விமான நிலைய ஓடுபாதையில் தறையிறங்க வானில் இருந்து கீழ் நோக்கி வந்தது. ஆனால், தறையிறங்க முயற்சிடும் போது திடீரென ஏற்பட்ட கோளாறு காணமாக ஓடுபாதையின் வலது புறத்தை நோக்கி விமானம் தாறுமாறாக சென்றது.
விமானத்தை ஓடுபாதையில் நிறுத்த முடியாமல் பைலட் திணறிய நேரத்தில், விமானத்தில் இருந்த பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, திடீரென விமானத்தின் இறக்கைகளில் இருந்து கரும்புகை வெளி வந்து, சிறிது நேரத்திற்கு பின்னர் புகை தீயாக மாறி மளமளவென்று எரியத் தொடங்கியது. பின்னர், தானியங்கி தொழில்நுட்பம் மூலம் விமானம் கட்டுப்படுத்தப்பட்டு ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நிறுத்தப்பட்டது.
விமானநிலையத்தில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ உடனடியாக அனைக்கப்பட்டது. மேலும், பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் தீப்பிடித்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment