தாகத்தை தணிக்க வாட்டர் பாட்டிலில்
தண்ணீரை குடித்த ராஜநாகம்
தண்ணீர் பற்றாக்குறையால் பரிதவித்த ராஜ நாகத்திற்கு பாட்டிலில் தண்ணீர் கொடுத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் தங்களது விளைபயிர்களை காக்கவும், மக்கள் குடிநீர் தேவைக்கும் போராடி வருகிறார்கள்.
கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய உத்தர கனரா மாவட்டத்திலும் வறட்சி நிலவுகிறது.
இந்த வறட்சி கொடிய விஷம் கொண்ட ராஜ நாகங்களையும் பாதித்துள்ளது. இப்படித்தான், மலைப்பகுதியிலிருந்து நீர் தேடி ஊருக்குள் வந்தது ஒரு ராஜநாகம்.
வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். பாம்பின் நிலையை பார்த்த வனத்துறை அதிகாரிகள், வாட்டர் பாட்டிலில் தண்ணீரை கொடுக்க அந்த பாம்பு தண்ணீரை குடித்தது காண்போரை வியக்க வைத்தது.
வனத்துறை அதிகாரிகளில் ஒருவர் பாம்பின் வாலை பிடித்துக்கொள்ள இன்னொருவர், அதன் தலை திடீரென உயர்த்தப்படாமல் இருக்க கம்பியால் பிடித்துக்கொண்டனர்.
வழக்கமாக தனது அருகே ஏதாவது பொருள் வந்தால் சீறும் இயல்புள்ள ராஜநாகம், குடிநீர் தாகத்தின் தாக்கத்தால், அப்படி எதையும் செய்யாமல் தண்ணீரை குடித்தது.
0 comments:
Post a Comment