லண்டன் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..!

 “தி கார்டியன்ஸ் எனப்படும் பாரிய கவச வாகனங்கள் 

மற்றும் பொலிஸார் குவிப்பு!!

லண்டன் நகர் முழுவதும் அதி நவீன கவச வாகனங்களுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 பேர் பலியானதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், லண்டன் நகரங்களில்தி கார்டியன்ஸ்எனப்படும் பாரிய கவச வாகனங்கள் மற்றும் ஆயுதத்துடனான பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலித் மசூத், என்ற பயங்கரவாதி, வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் முழுவதும் தனது காரை ஓட்டி வந்து பொலிஸ் அதிகாரி ஒருவரை குத்தியதை தொடர்ந்து, லண்டன் முழுவதும் பாதுகாப்பு இரட்டிப்பாகியுள்ளது.

இதனைடுத்து பயங்கரவாத தாக்குதல்களின் பிரதிபலனாக லண்டன் தெருக்களில் பாரிய ஆயுதங்கள் வைக்கப்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கவச வாகனங்கள் Weybridgeஇல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் V8 டர்போ-டீசல் இயந்திரம், குண்டு துளைக்காத கண்ணாடி மற்றும் குண்டு துளைக்காத டயர்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

"கார்டியன்ஸ்" என அழைக்கப்படும் கனரக இயந்திரங்களை கொண்ட இந்த வாகனம், முழுமையாக வெடிப்பு எதிர்ப்பு தளங்களை கொண்டு பாதுகாக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, லண்டன் நகர் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், நகரம் முழுவதும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top