புதிய வர்த்தமானியில் முஸ்லிம்களின் காணிகள்
உள்வாங்கப்பட மாட்டாது
– ஜனாதிபதி விளக்கம்
முஸ்லிம்களுக்கு
சட்டரீதியாக உரிமையுள்ள எந்த முஸ்லிம் மத
ஸ்தலங்களோ, கிராமங்களோ அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின்
மூலம் அரசுக்கு
பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என
ஜனாதிபதி செயலாளர்
கையொப்பமிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த
24 ஆம் திகதி
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன கையொப்பமிட்ட
வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி
முஸ்லிம் சிவில்
அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்
போதே இந்த
கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும்
குறித்த விவகாரம்
தொடர்பில் ஜனாதிபதி
செயலாளர் மற்றும்
அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாகவும்
இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
தனிப்பட்ட மற்றும்
அரசியல் நிகழ்ச்சி
நிரல்களை கொண்ட
ஒரு சிலர்
குறித்த வர்த்தமானி
அறிவித்தல் தொடர்பில் தப்பான கருத்துக்களை பரப்பிவருவதாக
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்
செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வில்பத்து
தேசிய சரணாலயத்துக்கு
வடக்காக அமைந்துள்ள
மாவில்லு, வெப்பல்,
மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு
ஆகியபகுதிகள் இணைக்கப்பட்டு ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’
பாதுகாக்கப்பட்ட வனம் என பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன கடந்த
24 ஆம் திகதி
தனது ரஷ்ய
பயணத்தின் போது
கையொப்பமிட்டிருந்தார்
.
ஜனாதிபதியின்
ஊடக அறிக்கை
வில்பத்து வனப்பகுதியுடன்
இணைந்த நான்கு வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல்
தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் பொய்யான பிரசாரம் தொடர்பானதாகும்.
வில்பத்து வனப்பகுதிக்கு வடக்கு திசையில் அமைந்துள்ள 04 வனப் பிரதேசங்களையும் வில்பத்து வனத்துடன் இணைத்து பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பெயரிடும் வர்த்தமானி கடந்த வாரம் ஜனாதிபதி அவர்களினால் கையெழுத்திடப்பட்டது.
இந்த வர்த்தமானியின் மூலம் தற்போது மக்கள் வாழ்ந்துவரும் கிராமங்கள் காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் என்பன அரசிற்கும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் கையகப்படுத்தப்பட்டுள்ளது என தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுடன் சிலர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அண்மித்ததாக காணப்படும் வனப் பகுதியினதும் பிரதேச மக்களினதும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்த வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகையினால் குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது வாழ்ந்து வரும் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசிற்கு கையகப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றேன்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.