‘சில்’ உடை விவகாரம்
“முன்னாள்
ஜனாதிபதியின் செயலாளர் குற்றவாளி”
3 வருட சிறை தண்டனை
கடந்த
ஜனாதிபதி தேர்தல்
காலத்தின் போது
‘சில்’ உடைகள்
விநியோகித்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித்
வீரதுங்க மற்றும்
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின்
முன்னாள் பணிப்பாளர்
நாயகம் அனூஷ
பல்விட்ட ஆகியோர்
குறித்த சம்பவத்தின்
குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 600 மில்லியன்
ரூபாய்களைப் பயன்படுத்தி வெள்ளைத் துணிகளை விநியோகம் செய்ததாக இவர்களுக்கு
எதிராகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குறித்த
வழக்கு விசாரணை
இன்று கொழும்பு
மேல் நீதிமன்றத்தில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில்
இவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம்
அடையாளப்படுத்தியுள்ளதுடன் 3 வருட சிறை தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment