இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபிர் ஹசீம் கருத்து தெரிவிக்கையில்,
கட்சி ஆரம்பம் முதல் இதுவரையில் செயற்பட்ட தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவு கூறப்பட்டதாக கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
கட்சியின் கொள்கை மற்றும் கருத்துக்கள் மூலம் நாட்டுக்கு பல்வேறு வெற்றிகள் கிடைத்துள்ளதாகவும் , கட்சியின் கொள்கை மற்றும் கருத்துக்கள் அற்ப அரசியலுக்காக காட்டிக்கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஐக்கியதேசியக் கட்சி எப்பொழுதும் ஒழுக்கத்துடன் செயற்படும் கட்சி என்பதினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுமைகளுக்கு உள்ளான போதிலும் நாட்டுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்வுகளை எட்டுவதற்கு முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இணக்கப்பாட்டு அரசாங்கமும் இதன் ஒரு பெறுபேறாகும் . நாட்டில் உருவான ஊழல் நிர்வாகத்தை புறம்தள்ளி தூய்மையான அரசியலை உருவாக்க தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் கட்சி செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கான முன்வரும் வேட்பாளர்களுக்கு சில விடயங்கள் அறிமுகப்படுத்தப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்திற்காக உயிரை தியாகம் செய்த எந்தவொரு படைவீரர்களுக்கும் அநீதி இடம்பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியிலும், அரசாங்கம் என்ற ரீதியிலும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டளவில் மக்கள் அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நாட்டை முன்னோக்கி இட்டுச்செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment