மியான்மர் நாட்டில் ரோகன்கயா என்ற முஸ்லிம் இனத்தினர் சிறுபான்மை மக்களாக உள்ளனர். அங்குள்ள பெரும்பான்மையான மக்களான புத்தமத்தினருக்கும், இவர்களுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. 1½ ஆண்டுகளுக்கு முன்பு பெரும் கலவரம் ஏற்பட்டு பல லட்சம் பேர் வங்கதேசத்தில் அகதிகளாக குடிபெயர்ந்தனர்.
தற்போது மீண்டும் மியான்மர் நாட்டில் கலவரம் ஏற்பட்டுள்ளது. ரோகன்கயா மக்களை ராணுவமும், போலீசும் தாக்குகின்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதனால் மக்கள் ஊரை காலி செய்துவிட்டு வங்காளதேசத்திற்கு அகதிகளாக ஓடுகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 73 ஆயிரம் பேர் வங்காளதேசத்திற்கு அகதிகளாக வந்துள்ளதாக ஐ.நா. செய்தி தொடர்பாளர் விவின்டான் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் மியான்மர் நாட்டின் எல்லையில் உள்ள வங்கதேச கிராமங்களில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை வங்காளதேச அரசு செய்து கொடுக்கவில்லை. இதனால் உணவு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். ஐ.நா. சபையாலும் தேவையான உதவிகளை உடனடியாக செய்ய முடியவில்லை.
எனவே வங்கதேச அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக செய்யும்படி ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது.
மியான்மரில் கலவரம் தொடர்ந்து நீடித்து வருதால் இன்னும் பல லட்சம் பேர் வங்காளதேசத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்காளதேசத்தில் ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment