பாடசாலை மாணவர்களிடம் வாசிப்புக்கான விருப்பத்தினை விருத்தி செய்யும் நோக்குடன் அமுல்படுத்தப்பட்டுள்ள 'உத்தம நண்பன் புத்தகமே' செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (06) கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பாடசாலைகளுக்கான புத்தக வழங்கல் செயற்பாடுகள் இத்துடன் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண கல்வி அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ மற்றும் அரச அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top